பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்திக்கு தடை; ஹிந்து மத விரோதம்: ஹிந்து முன்னணியினர் கடவுளிடம் முறையீடு

Added : செப் 03, 2021
Share
Advertisement
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு தடை விதித்துள்ளதை கண்டித்து, பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில், ஹிந்து முன்னணியினர் கடவுளிடம் முறையிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஹிந்துக்கள் தங்கள் பகுதியில் சிலைகள் பிரதிஷ்டை செய்து, தினசரி பூஜை செய்து, விழா முடிந்ததும் ஊர்வலமாக கொண்டு சென்று, நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்து, பாரம்பரியமாக
 விநாயகர் சதுர்த்திக்கு தடை; ஹிந்து மத விரோதம்: ஹிந்து முன்னணியினர் கடவுளிடம் முறையீடு

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு தடை விதித்துள்ளதை கண்டித்து, பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில், ஹிந்து முன்னணியினர் கடவுளிடம் முறையிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஹிந்துக்கள் தங்கள் பகுதியில் சிலைகள் பிரதிஷ்டை செய்து, தினசரி பூஜை செய்து, விழா முடிந்ததும் ஊர்வலமாக கொண்டு சென்று, நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்து, பாரம்பரியமாக கொண்டாடுகின்றனர்.விநாயகர் சதுர்த்தி விழா வரும், 10ம் தேதி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு வழக்கமான கொண்டாட்டங்கள், சிலை பிரதிஷ்டை, விசர்ஜன ஊர்வலத்துக்கு தடை விதித்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொள்ளாச்சியில் ஹிந்து முன்னணியினர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கடவுளிடம் முறையிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாவட்ட செயலாளர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்திகேயன், கோட்ட பொறுப்பாளர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.அவர்கள் கூறுகையில், 'டாஸ்மாக் கடைகள், சினிமா தியேட்டர்கள், பிற மத பண்டிகைகள், பஸ் போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் திறக்கவும், வழக்கம் போல இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், தி.மு.க., அரசு, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மட்டும் தடை விதித்து, ஹிந்து மத விரோதமாக நடந்து கொள்கிறது. இதை கடவுளிடம் முறையிட்டு எதிர்ப்பை தெரிவிக்கிறோம்,' என்றனர்.ஆனைமலைஆனைமலை, கோட்டூரில் நேற்று, ஹிந்து முன்னணி ஒன்றிய பொதுச்செயலாளர் சந்தோஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 25 கோவில்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்காக முறையீடு செய்தனர்.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஹிந்து முன்னணியினர், சுவாமியிடம் முறையீடு செய்து, வழிபட்டனர். கோவிலின் முன் நடந்த நிகழ்ச்சிக்கு, ஹிந்து முன்னணி தாலுகா பொதுச்செயலாளர் சேகர் தலைமை வகித்தார். பா.ஜ., மண்டல தலைவர் சுந்தர்ராஜ், ஹிந்துமுன்னணி ஒன்றிய தலைவர் ஜெயன், பொது செயலாளர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு ஒன்றிய ஹிந்து முன்னணியினர் நேற்று, பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், முருகனை வணங்கி, விநாயகர் சதுர்த்திக்கு தடைவிதித்த, தமிழகஅரசுக்கு நல்ல புத்தி தர வேண்டும் என, முறையிட்டனர். கோவை கோட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சிவகுமார், செல்வகுமார் முன்னிலை வகித்தனர். ஹிந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள்பங்கேற்றனர்.அரசு தடை விதித்தாலும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 44 இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தீர்மானிக்கப்பட்டது.உடுமலைதிருப்பூர் தெற்கு மாவட்டம், உடுமலை பகுதிகளில் ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்திவிழா தடையை நீக்க வலியுறுத்தி, கோவில்களில் முறையிடும் நிகழ்ச்சி நடந்தது.உடுமலை மாரியம்மன் கோவில், குட்டை சித்திபுத்தி விநாயகர் கோவில், ஏரிப்பாளையம் தங்காத்தம்மன் கோவில், சிவசக்தி காலனி ராஜகாளியம்மன் கோவில், எஸ்.வி.,புரம் விநாயகர் கோவில் உட்பட, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், 23 இடங்களில் முறையீடும் நடந்தது. ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.மடத்துக்குளம்மடத்துக்குளம் ஹிந்து முன்னணி சார்பில், ராஜகணபதி கோவிலில் இறைவனிடம் முறையிடும் போராட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணகுமார் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X