சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் அதிக பாரத்தால் திணறிய 'லிப்ட்' ; 13 பேர் பத்திரமாக மீட்பு

Added : செப் 03, 2021
Share
Advertisement
மதுரை :மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டுக்கான லிப்டில் ஒரே நேரத்தில் 13 பேர் சென்றதால் பாரம் தாங்காமல் பாதியில் நின்றது. தீயணைப்பு துறையினர் அரைமணி நேரத்தில் அவர்களை மீட்டனர்.இங்கு ஆறு மாடி கட்டடத்திற்கான லிப்டில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 8 பேர் செல்லலாம். நோயாளிகளின் உறவினர்கள், பார்வையாளர்கள் 13 பேர் லிப்ட்டில் நின்றனர். பாரம் தாங்காமல் திணறிய லிப்ட் முதல்
 அரசு மருத்துவமனையில் அதிக பாரத்தால் திணறிய 'லிப்ட்' ;  13 பேர் பத்திரமாக மீட்பு

மதுரை :மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டுக்கான லிப்டில் ஒரே நேரத்தில் 13 பேர் சென்றதால் பாரம் தாங்காமல் பாதியில் நின்றது. தீயணைப்பு துறையினர் அரைமணி நேரத்தில் அவர்களை மீட்டனர்.

இங்கு ஆறு மாடி கட்டடத்திற்கான லிப்டில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 8 பேர் செல்லலாம். நோயாளிகளின் உறவினர்கள், பார்வையாளர்கள் 13 பேர் லிப்ட்டில் நின்றனர். பாரம் தாங்காமல் திணறிய லிப்ட் முதல் தளத்திலிருந்து இரண்டாவது தளத்திற்கு சென்ற போது இடையில் நின்றது. லிப்ட்டுக்குள் இருந்தவர்கள் அவசரமாக தீயணைப்பு துறைக்கு தெரிவித்தனர். நிலைய அலுவலர் சுப்ரமணியன் தலைமையில் லிப்டில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நாங்கள் சென்ற போது 2வது தளம் அருகே லிப்ட் நின்றிருந்தது. கதவை திறக்கும் கருவி் மூலம் லிப்ட் கதவருகே கிடைத்த சின்ன இடைவெளியை மெல்ல விரிவடையச் செய்தோம். லிப்ட்டை மேலே இழுத்து அரைமணி நேரத்திற்குள் அனைவரையும் மீட்டோம். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X