பொது செய்தி

தமிழ்நாடு

பெண்ணை ஆணாய் மாற்றும் அறுவை சிகிச்சை; மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை

Added : செப் 03, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் தென்மாவட்டங்களில் முதன்முறையாக பெண்ணை ஆணாக மாற்றும் வகையில் கர்ப்பப்பை, கருமுட்டைகளை அகற்றி அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.மனதளவில் ஆணாகவும் தோற்றத்தில் பெண்ணாகவும் வாழ்ந்து வந்த 24 வயது எம்.காம் பட்டதாரி மற்றும் 21 வயது பி.காம் பட்டதாரி இருவருக்கும் ஓராண்டாக இங்கு ஹார்மோனுடன் தொடர்புடைய உளவியல்

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் தென்மாவட்டங்களில் முதன்முறையாக பெண்ணை ஆணாக மாற்றும் வகையில் கர்ப்பப்பை, கருமுட்டைகளை அகற்றி அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

மனதளவில் ஆணாகவும் தோற்றத்தில் பெண்ணாகவும் வாழ்ந்து வந்த 24 வயது எம்.காம் பட்டதாரி மற்றும் 21 வயது பி.காம் பட்டதாரி இருவருக்கும் ஓராண்டாக இங்கு ஹார்மோனுடன் தொடர்புடைய உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் கர்ப்பப்பை, கருமுட்டை அகற்றப்பட்டது.

டீன் ரத்தினவேல் கூறியதாவது: ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைத்தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் மகப்பேறு துறைத்தலைவி சுமதி, உதவி பேராசிரியர்கள் ஜெயந்தி கிருஷ்ணவேணி, மயக்கவியல் பேராசிரியர் பாப்பையா, டாக்டர் சுதர்சன் தலைமையில் இருவருக்கும் கர்ப்பப்பை மற்றும் கருமுட்டை நீக்குதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருவரும் குணமடைந்தனர் என்றார்.

அகச்சுரப்பியல் துறைத்தலைவர் ஸ்ரீதர் கூறியதாவது: தமிழக அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் வியாழன் தோறும் வார்டு எண் 4 ல் திருநங்கை, திருநம்பிகளுக்கு மருத்துவப் பிரிவு செயல்படுகிறது. இதுவரை 37 திருநங்கை மற்றும் திருநம்பிகள் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முந்தைய உளவியல் மற்றும் ஹார்மோன் சிகிச்சையில் உள்ளனர். 10 பேர் மூன்றாம் பாலின அறுவை சிகிச்சைக்கு தயாராக உள்ளனர்.

மாவட்ட சமூக நலத்துறையுடன் இணைந்து 170 பேருக்கு மூன்றாம் பாலினத்தவருக்கான அடையாள அட்டை வழங்கியுள்ளோம். அடுத்ததாக செயற்கை மார்பகம், செயற்கை ஆணுறுப்பு பொருத்துதல், குரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் லேசர் மூலம் முடிநீக்குதல் சிகிச்சை அளிக்க உள்ளோம் என்றார். டாக்டர்கள் மணிமாறன், குமணன், விஜயராகவன், ரவீந்திரன், ஸ்ரீலதா உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X