பொது செய்தி

தமிழ்நாடு

பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம்: '108' ஆம்புலன்ஸ் ஊழியர் சேவை

Added : செப் 03, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, சமத்துார் அருகே பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு, '108' ஆம்புலன்ஸ் செவிலியர் வீட்டிலேயே பிரசவம் பார்த்தார்.பொள்ளாச்சி, சமத்துாரை அடுத்த பொன்னேகவுண்டனுாரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, கூலித்தொழிலாளி. அவரது மனைவி தேவி,22. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், தேவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார்.அவருக்கு, நேற்று திடீரென்று பிரசவ

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, சமத்துார் அருகே பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு, '108' ஆம்புலன்ஸ் செவிலியர் வீட்டிலேயே பிரசவம் பார்த்தார்.பொள்ளாச்சி, சமத்துாரை அடுத்த பொன்னேகவுண்டனுாரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, கூலித்தொழிலாளி. அவரது மனைவி தேவி,22. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், தேவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார்.அவருக்கு, நேற்று திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தேவியை மருத்துவமனை அழைத்து செல்ல, '108' ஆம்புலன்ஸ் சேவைக்கு குடும்பத்தினர் அழைத்தனர்.ஆம்புலன்ஸ் பைலட் குபேர் மற்றும் அவசர கால மருத்துவ நிபுணர் வினோதினி ஆகியோர், ஆம்புலன்சில் தேவி வீட்டுக்கு விரைந்துள்ளனர்.அங்கு தேவியை பரிசோதித்த போது, உடனே பிரசவம் பார்த்ததாக வேண்டிய அவசர நிலைமையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவசர கால மருத்துவ நிபுணர் வினோதினி, தேவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தார்.இதில், தேவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். அவர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X