தோட்ட தொழிலாளர்களுக்கு வாரியம்: தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தோட்ட தொழிலாளர்களுக்கு வாரியம்: தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

Added : செப் 03, 2021
Share
கோத்தகிரி;நீலகிரியில் பணிபுரியும் சிறு குறு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.சிறு குறு தோட்ட தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கமலா சீராளன் முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள மனு:நீலகிரியில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பசுந்தேயிலை பறிப்பது உள்ளிட்ட தோட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோத்தகிரி;நீலகிரியில் பணிபுரியும் சிறு குறு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.சிறு குறு தோட்ட தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கமலா சீராளன் முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள மனு:நீலகிரியில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பசுந்தேயிலை பறிப்பது உள்ளிட்ட தோட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களுக்கு, தினக்கூலி தவிர, அரசின் வேறு சலுகைகள் கிடைப்பதில்லை.குடும்பங்களை நகர்த்த முடியாமல் திணறி வரும் தொழிலாளர்களுக்கு, சிறு குறு தேயிலை தோட்ட நல வாரியம் அமைத்து, தங்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, பேறுகால உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை மற்றும் மருத்துவ காப்பீட்டு உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் உதவிகள் கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கமலா சீராளன் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X