பொது செய்தி

தமிழ்நாடு

கமல் கட்சி பெண் நிர்வாகிக்கு தமிழக அரசு பொறுப்பு

Added : செப் 03, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
கோவை : கமல் கட்சி மாநில பெண் நிர்வாகிக்கு, 'நெகிழி மாசில்லா தமிழ்நாடு' அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பு குழு துாதுவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 'நெகிழி மாசில்லா தமிழ்நாடு' என்ற அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பு குழு துாதுவராக, மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலரான அனுஷா நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், திருப்பூரைச் சேர்ந்தவர். பள்ளி, கல்வி
 கமல் கட்சி பெண் நிர்வாகிக்கு தமிழக அரசு பொறுப்பு

கோவை : கமல் கட்சி மாநில பெண் நிர்வாகிக்கு, 'நெகிழி மாசில்லா தமிழ்நாடு' அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பு குழு துாதுவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

'நெகிழி மாசில்லா தமிழ்நாடு' என்ற அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பு குழு துாதுவராக, மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலரான அனுஷா நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், திருப்பூரைச் சேர்ந்தவர். பள்ளி, கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். கமல் கட்சியைச் சேர்ந்த மாநில பெண் நிர்வாகிக்கு, தமிழக அரசு பதவி வழங்கியிருப்பது, அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அனுஷாவிடம் கேட்டதற்கு, ''கடந்த 10 ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணி செய்து வருகிறேன். பள்ளி, கல்லுாரிகள் நடத்தி வருகிறோம். மாணவர்கள் மத்தியில், 'நெகிழி மாசில்லா தமிழ்நாடு' இயக்கத்தை சேர்ப்பிக்க வேண்டும்.''இதன் செயல்பாட்டை, வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லும் வகையில், சர்வதேச குழுவுக்கு துாதுவராக நியமித்துள்ளனர். இப்பொறுப்பை, கட்சி சார்ந்து பார்க்கவில்லை. தி.மு.க.,வில் இருந்து யாரும் பேசவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
06-செப்-202106:42:44 IST Report Abuse
 Muruga Vel அது என்ன நெகிழி ..தகைசால் ..இவுங்கமட்டும் க்ளவுட் நைன் ..சன்டீவி ..ஸ்டாலின், உதயநிதி, ஆதித்யா
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
04-செப்-202111:00:29 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy இரண்டும் வேறு கட்சி என்று நினைப்பவர்களும் உண்டா ?
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
04-செப்-202107:54:45 IST Report Abuse
Palanisamy Sekar கடந்த பத்தாண்டுகளில் இவரது பங்கு நிச்சயம் போற்றதற்குரியதாகத் தான் இருக்கும். இதில் தவறில்லை. சிறந்த பெண்ணுக்கு சிறந்த பதவிதான். இதை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பது கூடாது. வாழ்த்துக்களை சொல்வதில் தயக்கமும் கூடாது வாழ்த்துக்கள்.
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
05-செப்-202111:04:07 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்கட்சிகளைக் கடந்து பதவி வழங்கப்பட்டது வாடிகன் அல்லது அதன் அதிகாரபூர்வ சென்னை கிளையின் உத்தரவால் இருக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X