ஊட்டச்சத்து வாரம்: ஊட்டியில் பேரணி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டச்சத்து வாரம்: ஊட்டியில் பேரணி

Added : செப் 03, 2021
Share
ஊட்டி:ஊட்டியில், தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் சார்பில், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம் மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி நடந்தது.மத்திய பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்ட உட்டச்சத்து கண்காட்சியை, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். நிருபர்களிடம் கூறுகையில்,''கர்ப்பிணி தாய்மார்கள், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு

ஊட்டி:ஊட்டியில், தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் சார்பில், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம் மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி நடந்தது.மத்திய பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்ட உட்டச்சத்து கண்காட்சியை, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். நிருபர்களிடம் கூறுகையில்,''கர்ப்பிணி தாய்மார்கள், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடுகள் கண்டறிந்து தேவையான ஊட்டசத்து உணவு வழங்க வேண்டும். ஏற்கனவே, ஊட்டசத்து குறைபாட்டை தவிர்ப்பதற்கான பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.''அங்கன்வாடி பள்ளிவளாகம், கிராம ஊராட்சி, பிற பகுதிகளில் தோட்டம் அமைத்து காய்கறிகள், கீரை பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்ப்பதற்காக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் கண்டறியப்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் மூலம் ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது,'' என்றார். தொடர்ந்து, கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி நடந்தது.சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, சப்--கலெக்டர் மோனிகா ராணா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X