பொது செய்தி

இந்தியா

பொருளாதாரம் மீட்சி அடைந்தாலும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டில் வேலையின்மை விகிதம் 8.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், ஆகஸ்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான சி.எம்.ஐ.இ., தெரிவித்து உள்ளது.இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூலை மாதத்தில் வேலையின்மை விகிதம் 6.95 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட்
unemployment, unemployment rate, வேலைவாய்ப்பின்மை

புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டில் வேலையின்மை விகிதம் 8.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், ஆகஸ்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான சி.எம்.ஐ.இ., தெரிவித்து உள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூலை மாதத்தில் வேலையின்மை விகிதம் 6.95 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 8.32 சதவீதமாக அதிகரித்து உள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், நகர்ப்புற வேலையின்மை கிட்டத்தட்ட 10 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், 10 லட்சம் பேர் ஆகஸ்ட் மாதத்தில் வேலையிழப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இருப்பினும், ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு தான். கடந்த ஏப்ரல் மாதத்தில் 70 லட்சம் பேர் வேலை இழப்புக்கு ஆளாகினர்.


latest tamil news



வேலை வாய்ப்புக்கான சூழல், கடந்த சில ஆண்டுகளாகவே கடினமானதாக இருந்து வருகிறது. இதில் கொரோனா தாக்கம் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.நாட்டின் பொருளாதாரம் மெதுவாக மீட்சியடைந்து வழக்கமான நிலையை அடைந்து கொண்டிருக்கும் நிலையில், வேலைவாய்ப்புக்கான சந்தை தள்ளாடி வருகிறது. நாட்டில் ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில், வேலைவாய்ப்பின்மை விகிதம் இரட்டை இலக்க அளவில் உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
03-செப்-202109:07:23 IST Report Abuse
பாமரன் ஏகப்பட்ட வேலை வாய்ப்புகளை மிக குறைந்த காலத்தில் ஏற்ப்படுத்தி கொடுத்த இந்த ஜோமோட்டோ ஸ்விகி அமேசான் ஃபிளிப்கார்ட் மட்டும் வரலைன்னா இன்னைக்கு நாட்டில் உள்நாட்டு கலவரமே கூட வந்திருக்கும்... ஆனாலும் அமிச்சருங்க ... அதைவிட அதிகமாக வெட்டியா சீஃப் எகனாமிக் அட்வைசர் அப்படின்னு ஒரு ஆளை எல்லாமே நல்லாகீதுபா சொல்றதுக்குன்னே வச்சிருக்காங்க... மற்றும் நம்ம ஜிஜி மன் கி பாத் நிகழ்ச்சியில் எல்லாம் சூப்பர் அப்படின்னு பெருமைப்பட... நம் தள பகோடாஸ் ஆமாம் ஆமாம் ஐயா சொல்ல... ... ஸ்ஸ்ஸ் யப்பா முடியல...😩😩
Rate this:
Cancel
03-செப்-202109:02:58 IST Report Abuse
ஆரூர் ரங் தானியங்கி அறிவியல் வளரவளர உழைக்கும் ஆட்களின் தேவை குறையும். உதாரணமாக வீட்டிலிருந்தே பலர் வேலை செய்வதால் டாக்சி ஆட்டோ ஓட்டுநர் வேலைக்கு வாய்ப்பு குறைகிறது. 🤔மேலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை கொடுத்த பின் இங்கும் ஷேர் ஆட்டோ தொழில் நசுங்கி பரிதாபமாக உள்ளது . இனியும் மூர்க்கர போன்ற மக்கள் தொகையைக் குறைக்காவிட்டால் நாடே தள்ளாடும்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
03-செப்-202108:16:29 IST Report Abuse
duruvasar எங்களுக்கெல்லாம் விடியல் கிடைத்து 100 நாள் வெற்றிவிழா வை கடந்து 200 வது நாளை நோக்கி சைக்கிளில் போய் கொண்டிருக்கிறோம். தமிழன் தலைநிமிர்ந்து விட்டான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X