பொது செய்தி

தமிழ்நாடு

கோவை குற்றாலம் சுற்றுலா அனுமதி

Added : செப் 03, 2021
Share
Advertisement
தொண்டாமுத்துார்:கோவை குற்றாலம், பூச்சமரத்துாரில், வரும், 6ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கிப்படுவர் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:காரமடை வனச்சரகம் பூச்சமரத்தூர் மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகம் கோவை குற்றாலம் சுற்றுலா பகுதிகள், அரசின் வழிகாட்டுதலின்படி, வரும், 6ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்பட உள்ளன. சனி

தொண்டாமுத்துார்:கோவை குற்றாலம், பூச்சமரத்துாரில், வரும், 6ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கிப்படுவர் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:காரமடை வனச்சரகம் பூச்சமரத்தூர் மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகம் கோவை குற்றாலம் சுற்றுலா பகுதிகள், அரசின் வழிகாட்டுதலின்படி, வரும், 6ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்பட உள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூழல் சுற்றுலா செயல்படாது.பூச்சமரத்துாரில் 'ஆன்லைன்' முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.கோவை குற்றாலம் சுற்றுலா தளத்தில், காலை, 9:00 முதல் 9:30 வரை, 150 பேர், காலை, 10:30 முதல் 11:00 வரை, 150 பேர், பகல், 12:00 முதல் 12:30 வரை, 150 பேர், பகல், 1:30 முதல் 2:00 வரை, 150 பேர் என, ஒரு நாளுக்கு, மொத்தம், 600 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனை சான்று அல்லது இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்று வைத்திருக்க வேண்டும். www.coimbatorewilderness.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X