ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Added : செப் 03, 2021
Share
ஆனைமலை,:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பகுதிகள் திறக்கப்பட்டுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட நான்கு வனச்சரகங்கள் உள்ளன.கடந்த ஆறு மாதங்களாக கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக, புலிகள் காப்பகம் முழுவதிலும் உள்ள சுற்றுலா பகுதிகளில்,
 ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஆனைமலை,:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பகுதிகள் திறக்கப்பட்டுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட நான்கு வனச்சரகங்கள் உள்ளன.கடந்த ஆறு மாதங்களாக கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக, புலிகள் காப்பகம் முழுவதிலும் உள்ள சுற்றுலா பகுதிகளில், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசு உத்தரவுப்படி நேற்று முதல் புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பகுதிகள் திறக்கப்பட்டு, மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.இதையடுத்து, ஆழியாறு கவியருவி, டாப்சிலிப், வால்பாறை பகுதிகளுக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் சென்றனர். கவியருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கொட்டும் நீரில் மக்கள் குளித்து மகிழ்ந்தனர். டாப்சிலிப், அட்டகட்டி, சேத்துமடை, வால்பாறை, மானாம்பள்ளி பகுதிகளிலுள்ள, வனத்துறையினர் தங்கும் விடுதிகளிலும் 'புக்கிங்' துவங்கப்பட்டது.இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டவர்கள் அல்லது, கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, 72 மணி நேரத்து முன் 'நெகடிவ்' என, 'ரிசல்ட்' பெற்றவர்களை மட்டுமே அனுமதித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X