பனியன் துணி மோசடி: சென்னை நபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பனியன் துணி மோசடி: சென்னை நபர் கைது

Added : செப் 03, 2021
Share
திருப்பூர்:திருப்பூரில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பனியன் துணிகளை பெற்று, பணம் கொடுக்காமல் மோசடி செய்தவரை, சென்னையில் போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், ஓடக்காடு, பங்களா வீதியை சேர்ந்தவர் மயூர் அகர்வால், 45; பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். 2019ம் ஆண்டு, இவரிடம், சென்னை கொளத்துாரை சேர்ந்த அரவிந்த் வைஷ்ணவ், 40 என்பவர் பனியன் துணி 'ஆர்டர்' கொடுத்தார். இதற்கு சிறிய தொகையை
 பனியன் துணி மோசடி: சென்னை நபர் கைது

திருப்பூர்:திருப்பூரில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பனியன் துணிகளை பெற்று, பணம் கொடுக்காமல் மோசடி செய்தவரை, சென்னையில் போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், ஓடக்காடு, பங்களா வீதியை சேர்ந்தவர் மயூர் அகர்வால், 45; பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். 2019ம் ஆண்டு, இவரிடம், சென்னை கொளத்துாரை சேர்ந்த அரவிந்த் வைஷ்ணவ், 40 என்பவர் பனியன் துணி 'ஆர்டர்' கொடுத்தார். இதற்கு சிறிய தொகையை மட்டும் அரவிந்த் வைஷ்ணவ் செலுத்தி நம்பிக்கை ஏற்படுத்தினார்.இதையடுத்து, புதிய ஆர்டர்களுக்கான பனியன் துணிகளை மயூர் அகர்வால் 'சப்ளை' செய்தார். ஆனால், இதற்குரிய பணத்தை கொடுக்க காலம் கடத்தினார். அரவிந்த் வைஷ்ணவ் மொத்தம், 58 லட்சத்து, இரண்டாயிரத்து 586 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.இதேபோல், திருப்பூரில் உள்ள சிலரிடம், பல லட்சம் ரூபாய்க்கு, பனியன் துணிகளை பெற்று, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.அரவிந்த் வைஷ்ணவ் மீது திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். ஓராண்டாக தலைமறைவாக இருந்த இவரை திருப்பூர் தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X