சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி வாகனங்களை விற்று மோசடி: கோவையில் இருவர் கைது

Added : செப் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை;பள்ளி வாகனங்களை சரிசெய்வதாக பெற்று, 10 லட்சம் ரூபாய்க்கு விற்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் அருள். சிவகங்கையில், சி.பி.எஸ்.இ., பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்.அருளின் நண்பர் கோவையை சேர்ந்த யூசுப் அலி. இவர் அருளிடம் இருந்து ரூ.6 லட்சம் கடனாக பெற்றிருந்தார். கடந்த மே மாதம் அருள் இறந்ததால், பள்ளி நிர்வாகத்தை அவரது மகன் வினோத் பார்க்கத்
 பள்ளி வாகனங்களை விற்று மோசடி: கோவையில் இருவர் கைது

கோவை;பள்ளி வாகனங்களை சரிசெய்வதாக பெற்று, 10 லட்சம் ரூபாய்க்கு விற்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் அருள். சிவகங்கையில், சி.பி.எஸ்.இ., பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்.அருளின் நண்பர் கோவையை சேர்ந்த யூசுப் அலி. இவர் அருளிடம் இருந்து ரூ.6 லட்சம் கடனாக பெற்றிருந்தார். கடந்த மே மாதம் அருள் இறந்ததால், பள்ளி நிர்வாகத்தை அவரது மகன் வினோத் பார்க்கத் துவங்கினார். இதையடுத்து யூசுப் அலி கடன் பெற்றது தெரிந்தது.கடனை திருப்பிக் கேட்ட போது, பணத்துக்கு பதில், பள்ளி வாகனங்களை சர்வீஸ் செய்து தருவதாக கூறினார். இதை உண்மை என நம்பிய வினோத் கடந்த மூன்று வாரங்களுக்கு முன், மூன்று வாகனங்களை அனுப்பி வைத்தார். வாகனங்களை யூசுப் அலி மற்றும் கூட்டாளி சாம்பால், 24, இருவரும் பெற்றுக் கொண்டனர்.வாகனங்களை சர்வீஸ் செய்வதற்கு பதில், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அந்தோணி மைக்கேல் சேவியர், 52 என்பவருடன் யூசுப் அலி ஒப்பந்தம் செய்து, ரூ.10 லட்சத்துக்குவிற்பனை செய்தார். தொடர்ந்து பள்ளி வாகனங்களின் நிறங்களையும் மாற்றினர்.இந்நிலையில், மூன்று வாரங்களாக வாகனங்களை ஒப்படைக்காததால், வினோத் கேட்டபோது, யூசுப் அலி முறையாக பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து வினோத் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார்.வழக்கில் தொடர்புடைய சாம்பால், அந்தோணி மைக்கேல் சேவியர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான யூசுப் அலியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-செப்-202123:38:52 IST Report Abuse
Ram Pollachi கார் திருடர்கள் அதிகமாகி விட்டார்கள். பார்த்து யோசித்து வாங்குவது நலம் குறிப்பாக சென்னை பதிவு வாகனங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X