சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோயில்களின் முன்பாக ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து ஹிந்து முன்னணியினர் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விநாயகர் சதுர்த்தி செப்.10 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கொரோனா காரணமாக பொது இடத்தில் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி

திண்டுக்கல் : விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து ஹிந்து முன்னணியினர் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி செப்.10 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கொரோனா காரணமாக பொது இடத்தில் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் ஹிந்து முன்னணி சார்பில் கோட்டை மாரியம்மன், அபிராமி அம்மன் கோயில் முன் பிரார்த்தனை செய்தும், கோஷமிட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜா, செயலாளர்கள் சஞ்சீவி, வீரதிருமூர்த்தி பங்கேற்றனர்.

பழநி முருகன் மலைக்கோவில், பாத விநாயகர் கோயில் உள்பட 40-க்கும் மேற்பட்ட கோயில்களில் பிராத்தனை நிகழ்ச்சியை நடத்தினர். மாவட்ட பொது செயலாளர் ஜெகன், கோட்ட செயலாளர் பாலன், பொருளாளர் அருண், துணைத்தலைவர்கள் ராஜா, பிரவீன் பங்கேற்றனர்.வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள், அய்யலுார் களர்பட்டி மகாகாளியம்மன் உள்பட 7 ஊர்களில் வழிபாடுகள் நடந்தன.

மாவட்ட செயலாளர் சதீஸ்சங்கர், செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் சுரேஷ், பொது செயலாளர்கள் ஈஸ்வரன், சிவனேசன், நகர செயலாளர் லோகநாதன் பங்கேற்றனர்.ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் தளபதி ரகுபதி தலைமை வகித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X