குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பத்தாயிரம் பேருக்கு பயிற்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பத்தாயிரம் பேருக்கு பயிற்சி

Added : செப் 03, 2021
Share
திண்டுக்கல் : 'குழந்தைகள் பாதுகாப்பு குறித்து 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் தெரிவித்தார்.திண்டுக்கல் மாவட்டத்தை குழந்தைகள் பாதுகாப்பில் முன்மாதிரி மாவட்டமாக உருவாக்கும் திட்ட துவக்க விழா மற்றும் பயிற்சி வகுப்பை கலெக்டர் விசாகன் துவக்கி வைத்தார்.குழந்தை பாதுகாப்பு அலுவலர்

திண்டுக்கல் : 'குழந்தைகள் பாதுகாப்பு குறித்து 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தை குழந்தைகள் பாதுகாப்பில் முன்மாதிரி மாவட்டமாக உருவாக்கும் திட்ட துவக்க விழா மற்றும் பயிற்சி வகுப்பை கலெக்டர் விசாகன் துவக்கி வைத்தார்.குழந்தை பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, குழந்தை நலக்குழு தலைவர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர்.ஆணைய உறுப்பினர் ராமராஜ் பேசியது: ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 வகையான குழந்தை பாதுகாப்பு குழுக்கள் அமைத்து செயல்பட வேண்டும். இக்குழுக்களை வலுப்படுத்த ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய குழுக்கள் அமைத்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள், குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு வழங்க வேண்டும்.குழந்தைகள் போதை பொருட்களை உபயோகிப்பதை தடுக்க வேண்டும். இவற்றை குழந்தைகளுக்கு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருந்துக் கடைகளில் 18 வயதுக்குட்பட்டோருக்கு போதை தரும் மருந்துகளை டாக்டர் பரிந்துரையின்றி விற்பது குற்றம்.

பாதுகாப்பு குழுக்கள் குழந்தைகளிடம் புகையிலை மற்றும் போதை பழக்கம் ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பில் இந்தியாவில் திண்டுக்கல் முன்மாதிரி மாவட்டமாக திகழும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X