பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரிகளுக்கு 60 சதவீத மாணவர்கள் வருகை

Added : செப் 03, 2021
Share
Advertisement
தேனி : கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் துவங்கிய கல்லுாரிகளில் மாணவர்கள் வருகை 60 சதவீதத்ததை எட்டியுள்ளது.தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி, சட்டம், தோட்டக்கலை, இன்ஜினியரிங்,கலை அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., என 10 கல்லுாரிகள் செயல்படுகின்றன. கொரோனா பரவலை தடுக்க மூடப்பட்ட கல்லுாரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம்

தேனி : கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் துவங்கிய கல்லுாரிகளில் மாணவர்கள் வருகை 60 சதவீதத்ததை எட்டியுள்ளது.

தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி, சட்டம், தோட்டக்கலை, இன்ஜினியரிங்,கலை அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., என 10 கல்லுாரிகள் செயல்படுகின்றன. கொரோனா பரவலை தடுக்க மூடப்பட்ட கல்லுாரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் துவக்கப்பட்டது.

இதில் 9 ஆயிரத்து 547 மாணவர்கள், 11 ஆயிரத்து 322 மாணவிகள் என 20 ஆயிரத்து 869 பேர் படிக்கின்றனர். நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர 2, 3, 4ம் ஆண்டு மாணவர்கள், இறுதியாண்டு படிப்போர் என 12 ஆயிரத்து 521 பேர் கல்லுாரிக்கு வந்தனர். மாணவர் வருகை 60 சதவீதமாகும். மாணவர்களில் 6 ஆயிரத்து 607 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகாததால் தடுப்பூசி செலுத்தாததால் ஆன்-லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.இக் கல்லுாரிகளில் பேராசிரியர்கள், அலுவலர்கள் என 2ஆயிரத்து 685 பேர் உள்ளனர். இதில் 71.69 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்திகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X