பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை மும்மடங்கு உயர்வு

Added : செப் 03, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் கே.ஆர்., அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை மும்மடங்காக அதிகரித்து உள்ளது.ஒட்டன்சத்திரம் -- பழநி ரோட்டில் கே.ஆர்.அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி கடந்தாண்டு மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்டது. எல்.கே.ஜி., - 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது.கடந்தாண்டு

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் கே.ஆர்., அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை மும்மடங்காக அதிகரித்து உள்ளது.

ஒட்டன்சத்திரம் -- பழநி ரோட்டில் கே.ஆர்.அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி கடந்தாண்டு மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்டது. எல்.கே.ஜி., - 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது.கடந்தாண்டு இப்பள்ளியில் 450 மாணவர்களே படித்தனர்.

பின், கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தாண்டு இப்பள்ளியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துஉள்ளது. தற்போது 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதற்கேற்ப கூடுதல் வகுப்பறை கட்டவும், கூடுதல் ஆசிரியரை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X