தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள்

Added : செப் 03, 2021
Share
ஆண்டிபட்டி: வைகை அணைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ள அணை நீர் தேக்கத்தின் ஆபத்தான பகுதிக்கு சென்று வருகின்றனர்.கொரோனா ஊரடங்கில் அரசின் தளர்வுக்குப்பின் ஆக. 27 முதல் சுற்றுலா பயணிகள் வைகை அணை மற்றும் பூங்கா பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வெளியூர்களில் இருந்து அதிகமானோர் வந்து செல்கின்றனர்.அணை நீர் மட்டம் 63.30

ஆண்டிபட்டி: வைகை அணைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ள அணை நீர் தேக்கத்தின் ஆபத்தான பகுதிக்கு சென்று வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கில் அரசின் தளர்வுக்குப்பின் ஆக. 27 முதல் சுற்றுலா பயணிகள் வைகை அணை மற்றும் பூங்கா பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வெளியூர்களில் இருந்து அதிகமானோர் வந்து செல்கின்றனர்.அணை நீர் மட்டம் 63.30 அடியாக உள்ளது. (மொத்த உயரம் 71 அடி).பயணிகள் நீர் தேக்கத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட ஆபத்தான பகுதிக்கு சாதாரணமாக சென்று வருகின்றனர். இங்கு கண்காணிக்க பொதுப்பணித்துறை, போலீசார் இல்லை. எனவே அசம்பாவிதத்தை தவிர்க்க தடை பகுதிக்கு சென்று வருபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X