கேரளாவில் வீட்டு வேலை செய்த குழந்தை தொழிலாளர்கள் மீட்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் வீட்டு வேலை செய்த குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

Added : செப் 03, 2021
Share
தேனி : கேரளாவில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட இரு பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்டு தேனி கலெக்டர் முரளீதரன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.கேரளா, எர்ணாகுளம் தாலுகா, பெரும்பாவூரில் இரு வீட்டில் ஆண்டிபட்டி அருகே மணியகாரன்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுமி, திருச்சியை சேர்ந்த 14 வயது சிறுமி வேலைக்காக அமர்த்தப்பட்டனர். அங்கு அவர்களுக்க பணி சுமை அதிகரித்து கொடுமைப்படுத்துவதாக

தேனி : கேரளாவில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட இரு பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்டு தேனி கலெக்டர் முரளீதரன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கேரளா, எர்ணாகுளம் தாலுகா, பெரும்பாவூரில் இரு வீட்டில் ஆண்டிபட்டி அருகே மணியகாரன்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுமி, திருச்சியை சேர்ந்த 14 வயது சிறுமி வேலைக்காக அமர்த்தப்பட்டனர். அங்கு அவர்களுக்க பணி சுமை அதிகரித்து கொடுமைப்படுத்துவதாக புகார் வந்தது. எர்ணாகுளம் போலீசார், குழந்தை பாதுகாப்பு நல குழுவினர் ஆய்வு செய்து 2 சிறுமிகளை மீட்டனர்.

குடும்ப வறுமையால் மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்திற்கு 16 மாதங்களாக வேலை செய்ததாக தெரியவந்தது.இரு சிறுமிகளையும் கேரளா குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார், உறுப்பினர்கள் நாகேந்திரன், பழனிச்சாமி, பிரேமா, நன்னடத்தை அலுவலர் அன்ன லட்சுமி முன்னிலையில் ஒப்படைத்தனர்.

குழந்தைகள் கலெக்டர் முரளீதரன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களின் குடும்ப சூழலை விசாரித்து அறிக்கை வழங்கவும், அதுவரை காப்பகத்தில் பராமரிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X