பழைய வாகனங்களில் விஷப்பூச்சிகள் தஞ்சம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
பெரியகுளம் : பெரியகுளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் கிடக்கும் பழைய வாகனங்களில், விஷபூச்சி தங்குவதால் அலுவலர்கள் சிரமப்படுகின்றனர்.சோத்துப்பாறை அணை கட்டுமானப்பணி 1996-97 ல் துவங்கி 2001ல் முடிந்தது. அதற்காக பொதுப்பணித்துறையினர்தண்ணீர் லாரி, கலவை இயந்திரம் உட்பட பொருட்களை பயன்படுத்தினர். அணை கட்டுமானத்திற்கு பிறகு இதனை வேறு

பெரியகுளம் : பெரியகுளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் கிடக்கும் பழைய வாகனங்களில், விஷபூச்சி தங்குவதால் அலுவலர்கள் சிரமப்படுகின்றனர்.

சோத்துப்பாறை அணை கட்டுமானப்பணி 1996-97 ல் துவங்கி 2001ல் முடிந்தது. அதற்காக பொதுப்பணித்துறையினர்தண்ணீர் லாரி, கலவை இயந்திரம் உட்பட பொருட்களை பயன்படுத்தினர். அணை கட்டுமானத்திற்கு பிறகு இதனை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல் இங்கு அலுவலக வளாகத்தில் கிடப்பில் போட்டுள்ளனர்.

இந்த வாகனத்தின் டிரைவர் சீட் பகுதியில், விஷபூச்சிகள் அதிகளவில் தங்கியுள்ளது.அருகே பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் உள்ளது.அலுவலகத்திற்கு பூச்சிகள் அவ்வப்போது செல்வதால் பெண் அலுவலர்கள் அச்சப்படுகின்றனர். இதனை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X