கட்டடங்களில் தீத்தடுப்பு சாதனங்கள் கட்டாயம்; தேனி தீயணைப்புத்துறை அலுவலர் அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்டடங்களில் தீத்தடுப்பு சாதனங்கள் கட்டாயம்; தேனி தீயணைப்புத்துறை அலுவலர் அறிவுரை

Added : செப் 03, 2021
Share
தேனி : '' பாதுகாப்பு கருதி குடியிருப்புப்பகுதிகள் உட்பட அனைத்து வணிக கட்டடங்களிலும் விதிமுறைப்படி தீத்தடுப்பு சாதனங்களை அமைப்பது கட்டாயம்,'' என , தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை தேனி மாவட்ட அலுவலர் கல்யாண்குமார் தெரிவித்தார்.இவரது அலுவலகம் தேனி என்.ஆர்.டி., நகர் காமராஜர் ரோட்டில் அமைந்துள்ளது. சமீபத்தில் துவங்கப்பட்ட சின்னமனுார் தீயணைப்பு நிலையத்தையும்

தேனி : '' பாதுகாப்பு கருதி குடியிருப்புப்பகுதிகள் உட்பட அனைத்து வணிக கட்டடங்களிலும் விதிமுறைப்படி தீத்தடுப்பு சாதனங்களை அமைப்பது கட்டாயம்,'' என , தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை தேனி மாவட்ட அலுவலர் கல்யாண்குமார் தெரிவித்தார்.

இவரது அலுவலகம் தேனி என்.ஆர்.டி., நகர் காமராஜர் ரோட்டில் அமைந்துள்ளது. சமீபத்தில் துவங்கப்பட்ட சின்னமனுார் தீயணைப்பு நிலையத்தையும் சேர்த்து மாவட்ட முழுவதும் 9 தீயணைப்பு நிலையங்கள் தற்போது இயங்குகின்றன. ஒன்பது நிலைய அலுவலர்கள், நான்கு போக்குவரத்து நிலைய அலுவலர்கள், முதுநிலை தீயணைப்பு வீரர்கள் 18 பேர், பத்து மெக்கானிக்குகள், 17 டிரைவர்கள், 103 தீயணைப்பு வீரர்களுடன் 163 பேர் மீட்புப் பணிகளை கவனிக்கின்றனர். மாவட்ட அலுவலர் கூறியதாவது:

எந்த மாதிரியான பணிகளை மேற்கொள்கிறீர்கள்

தீயணைப்புத்துறை என இருந்த பெயர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை என 2001ல் மாற்றப்பட்டது. எங்களுடைய முதல்பணி தீ விபத்து மீட்புதான். ஆனால் புயல், பூகம்பம், நிலச்சரிவு, சூறாவளி உள்ளிட்ட இயற்கை பேரிடரில் இருந்து மக்களை மீட்பதற்கு முன்னுரிமை தரப்படும். ரோட்டில் விபத்தில் சிக்கிய வாகனங்கள் , மனிதர்கள் முதல் ஆடு, மாடுகள் உள்ளிட்ட விலங்கினங்கள் கிணற்றில் விழுந்தால் மீட்பது, 'லிப்ட்'டில் சிக்கிக் கொள்பவர்களை மீட்பது போன்ற பல்வேறு பணிகளை செய்கிறோம்.

நீர்நிலைகளான கல்குவாரி, ஆறு, குட்டை, குளம் போன்றவற்றில் விழுந்தவர்களை காப்பாற்றுவோம். வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு, சூழ்நிலை கருதி தனிநபர் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னையில் பாதுகாப்பு, திருவிழாக்கள், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறோம். இதுதவிர தனியார் திருமணங்கள், நிகழ்ச்சிகளுக்கு ரூ.600, வணிக நிறுவனங்களுக்கு ரூ.2400 கட்டண அடிப்படையில் பாதுகாப்பு வழங்கி வருகிறோம்.

தீத்தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து

ஏப்., 14ல் தீ தொண்டு நாளாக கடைபிடிக்கிறோம். அன்று முதல் ஏப்., 20 வரை தீத்தொண்டு வாரம் கொண்டாப்படுகிறது. அப்போது பள்ளிகள், கல்லுாரிகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகளில் தீவிபத்து ஏற்படாமல் இருப்பதற்கான பயிற்சி முகாம்கள், செயல்முறை விளக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டாசு வெடிப்பதன் மூலம் ஏற்படும் சிறுவிபத்துக்களை தவிர்ப்பது, சிறுவர், சிறுமிகள், பெண்கள், முதியவர்கள் எவ்வாறு பட்டாசுகளை பயன்படுத்துவது, தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி குறித்து விளக்குகிறோம்.

தீத்தடுப்பு குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்துள்ளீர்களா

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குனரகம் உத்தரவில் ரூ.1000 கட்டணத்தில் தன்னார்வலர்களுக்கு தனிநபர் பயிற்சி வழங்கி வருகிறோம். 2015ல் 37 பேர், 2018 ல் 5 பேர் , 2020ல் 2 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். விருப்பம் தெரிவிப்போருக்கு இப்பயிற்சி வழங்கப்படும்.

கட்டடங்களுக்கு தடையின்மை சான்றிதழ், 'தீத்தடுப்பு உரிமம்' அவசியமா

அடுக்குமாடி குடியிருப்புக்கள், குழு குடியிருப்புக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், திருமண மஹால் உள்ளிட்ட 50 நபர்களுக்கு மேல் கூடும் அரங்குகள், உற்பத்தி நிறுவனங்கள், வணிக கட்டடங்கள், தொழிற்சாலைகள், வேளாண், திட, திரவ பொருட்களை பதப்படுத்த பயன்படுத்தும் கட்டடங்கள், மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் சூழலில் உள்ள, வெடிக்கும் தன்மையுள்ள அமோனியம் நைட்ரேட், குளோரின், எல்.பி.ஜி., காஸ், எண்ணெய் எரிவாயு பொருட்கள் உள்ள கட்டடங்கள் என பிரிக்கப்பட்டுள்ளன.

அங்கெல்லாம் சாதனங்கள் மூலம் எவ்வாறு தீத்தடுப்பு நடவடிக்கைகள் கையாள வேண்டும் என தேசிய கட்டட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனை அமைப்பது ஏதோ செலவினம் எனக்கருதி தவிர்க்காமல் விபத்தில் இருந்து தங்களைத்தாங்களே பாதுகாப்பதற்கான முதலீடு என அதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து கட்டடங்களிலும் தீத்தடுப்பு சாதனங்களை அமைப்பது கட்டாயம். தடையின்மை சான்றிதழ் அவசியம்.

தீத்தடுப்பு சாதனங்கள் பராமரிப்பு குறித்து பெரும்பாலானோர் தீத்தடுப்பு சாதனங்களை நிறுவி விட்டு முறையாக பராமரிப்பது இல்லை. ஆண்டு பராமரிப்பு வழங்கும் நிறுவனங்கள் மூலம் அதை பராமரிப்பது அவசியம். பொதுமக்கள் எங்களை 101 என்ற அலைபேசி எண் மூலமும், 1906 என்ற டோல் ப்ரி எண் மூலம் எந்நேரமும் உதவிக்கு அழைக்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X