சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
தேனி : விநாயகர் சதுர்த்தி விழா, ஊர்வலங்களுக்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து மாவட்டம் முழுவதும் ஹிந்து முன்னணி சார்பில் 32 கோயில்களில் கூட்டுப்பிரார்த்தனை, ஆர்ப்பாட்டம் நடந்தது.தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நடந்த கூட்டுப்பிரார்த்தனையில் மாவட்டப் பொதுச்செயலாளர் முருகன் தலைமையில் மாவட்டச்செயலாளர் உமைய ராஜன், கார்த்திக் முன்னிலையில் நிர்வாகிகள்,

தேனி : விநாயகர் சதுர்த்தி விழா, ஊர்வலங்களுக்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து மாவட்டம் முழுவதும் ஹிந்து முன்னணி சார்பில் 32 கோயில்களில் கூட்டுப்பிரார்த்தனை, ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நடந்த கூட்டுப்பிரார்த்தனையில் மாவட்டப் பொதுச்செயலாளர் முருகன் தலைமையில் மாவட்டச்செயலாளர் உமைய ராஜன், கார்த்திக் முன்னிலையில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். தமிழக அரசுக்கு புத்தி புகட்ட வேண்டும் என வேண்டினர். பொம்மையக்கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார், நக்கீரர் தெரு விநாயகர், சந்தை மாரியம்மன், பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் உள்ளிட்ட 32 கோயில்களில் காலை 7:00 மணி முதல் 10:45 மணி வரை கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆண்டிபட்டி: ஆண்டி பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராஜ், ஹிந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர்கள் பூங்கொடி, இந்திரா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 'டாஸ்மார்க்' கடைகள் திறக்கலாம். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடக் கூடாதா உட்பட பல கோஷங்கள் எழுப்பினர்.

இளைஞர் அணி அமைப்பாளர் மனோஜ்குமார், நிர்வாகிகள் வசந்த், கருப்பையா, முனீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கொப்பையம்பட்டி, ராஜதானி, தெப்பம்பட்டி, ராசக்காள்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், கீழமுத்தனம்பட்டி கிராமங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூடலுார்: கூடலுார் புது பஸ் ஸ்டாண்டில் ஹிந்து முன்னணி நகர தலைவர் தெய்வேந்தின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி சூடம் ஏற்றி வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X