பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் ரூ.100 கோடியில் பறக்கும் மேம்பாலம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
தேனி : தேனியில் ரூ.100 கோடியில் மேம்பாலம் அமைக்கும் திட்ட வடிவமைப்பில் மாற்றம் செய்து வழங்க நெடுஞ்சாலை துறை உத்தரவிட்டுள்ளது.தேனியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த ஆட்சியில் ரூ.100 கோடி மதிப்பில் பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு, கம்பம் ரோட்டை இணைக்கும் வகையில் பறக்கும் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இப் பாலம் பெரியகுளம் ரோடு பெண்கள் பள்ளியில் துவங்கி நேரு சிலை

தேனி : தேனியில் ரூ.100 கோடியில் மேம்பாலம் அமைக்கும் திட்ட வடிவமைப்பில் மாற்றம் செய்து வழங்க நெடுஞ்சாலை துறை உத்தரவிட்டுள்ளது.

தேனியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த ஆட்சியில் ரூ.100 கோடி மதிப்பில் பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு, கம்பம் ரோட்டை இணைக்கும் வகையில் பறக்கும் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இப் பாலம் பெரியகுளம் ரோடு பெண்கள் பள்ளியில் துவங்கி நேரு சிலை வரையும், கொட்டக்குடி பாலத்தில் துவங்கி நேரு சிலையிலும், பங்களாமேட்டில் துவங்கி நேருசிலையில் முடியும். பாலம் ஆயிரத்து 510 மீ., நீளம், 7.5 மீ. அகலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது. மாநில நெடுஞ்சாலை முதன்மை பொறியாளர் கடந்தாண்டு ஆய்வு செய்து அனுமதி வழங்கினார்.

பாலம் அமையும் பகுதியில் மண் மாதிரி ஆய்வு நடத்தினர். டெண்டர் நிலையில் மேம்பால திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் பாலம் அமையும் இடம் குறுகலாக இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே இப் பகுதியில் அகலம் அதிகப்படுத்தி வரைபடம் மாற்றி வழங்க கோரினர். வடிவமைப்பு மாற்றி வரைபடம் தயார் செய்து அதன்பின் நிபுணர் குழு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கப்படும். இப் பணிகளால் மேம்பாலம் அமைக்கும் திட்டம் மேலும் தாமதமாகும் என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X