ராணுவத்துறையில் சுயசார்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கீவாடியா: ''ராணுவத்துறையில் நாடு சுயசார்பு பெற வேண்டும் என்பதே நம் இலக்கு,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.குஜராத் மாநிலம் காந்திநகரில் அடுத்த ஆண்டு மார்ச் 11 - 13ம் தேதி வரை ராணுவ தளவாட கண்காட்சி நடக்க உள்ளது. இந்நிலையில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் மாநிலம் கீவாடியாவுக்கு நேற்று வந்தார். ராணுவ தளவாடங்கள் கண்காட்சி நடத்துவது தொடர்பாக ராணுவ
Rajnath Singh, Union Defence Minister, BJP, ராஜ்நாத் சிங்

கீவாடியா: ''ராணுவத்துறையில் நாடு சுயசார்பு பெற வேண்டும் என்பதே நம் இலக்கு,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் அடுத்த ஆண்டு மார்ச் 11 - 13ம் தேதி வரை ராணுவ தளவாட கண்காட்சி நடக்க உள்ளது. இந்நிலையில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் மாநிலம் கீவாடியாவுக்கு நேற்று வந்தார். ராணுவ தளவாடங்கள் கண்காட்சி நடத்துவது தொடர்பாக ராணுவ அமைச்சகத்துக்கும், குஜராத் அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.


latest tamil news



நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் கடந்தாண்டு 11வது ராணுவ தளவாடங்கள் கண்காட்சி நடந்தது. இதில் 70 நாடுகள் பங்கேற்றன. குஜராத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள கண்காட்சியில் 100க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கிறோம். ராணுவத்துறையில் இந்தியா சுயசார்பு பெற வேண்டும் என்பதே நம் இலக்கு.

ராணுவ தளவாடங்களை தயாரிப்பதுடன், அவற்றை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் இந்தியா மாற வேண்டும். ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளதை சர்வதேச அளவில் பகிரங்கப்படுத்துவதே அடுத்த ஆண்டு நடக்க உள்ள கண்காட்சியின் முக்கிய நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E. RAJAVELU - Chennai,இந்தியா
03-செப்-202112:47:40 IST Report Abuse
E. RAJAVELU எதுக்கு இவ்வளவு சிரமம், அதனி , அம்பானிக்கு வித்துடுங்க.
Rate this:
Cancel
03-செப்-202111:12:17 IST Report Abuse
அப்புசாமி ரஃபல், ஏவுகணை, ஹெலிகாப்டர் டாங்கி எல்லாம் சுயசார்பா இறக்குமதி பண்ணியாச்சு. அதுங்களுக்கு அடிக்க பெயிண்ட் வேணும்னா இங்கே ரெடி பண்ணிடலாம்.
Rate this:
E. RAJAVELU - Chennai,இந்தியா
03-செப்-202112:29:14 IST Report Abuse
E. RAJAVELUஎலுமிச்சம் பழம் மட்டுமே சுயசார்பு....
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
03-செப்-202107:44:37 IST Report Abuse
மதுரை விருமாண்டி நான்கைந்து கார்ப்பரேட் முதலாளிகளை சார்ந்து இருந்து அவர்களுக்கு ராணுவத்துளையின் பொதுநிறுவனங்களை தாரை வார்ப்பதைத் தான் சுயசார்பு கொள்கை. 🐒
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X