பொது செய்தி

தமிழ்நாடு

வார ராசி பலன்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021
Share
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (3.9.2021 - 9.9.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்குரு, செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் சாதக நிலையில் உள்ளனர். அம்பாள் வழிபாடு நலம் அளிக்கும்.அசுவினி: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் எளிதாக வெற்றி பெறும். எதிர்பார்த்த பணவரவு
Horoscope, Weekly Horoscope, Zodiac, வார ராசி பலன், ராசிகள், பலன், பரிகாரம்

வெள்ளி முதல் வியாழன் வரை (3.9.2021 - 9.9.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


குரு, செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் சாதக நிலையில் உள்ளனர். அம்பாள் வழிபாடு நலம் அளிக்கும்.
அசுவினி: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் எளிதாக வெற்றி பெறும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக் கூடும்.
பரணி: பதவி உயர்வு அல்லது இடமாற்றம் ஏற்படும். தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும். புதிய தொழில் முயற்சிக்கான பேச்சை இரண்டு நாள் தள்ளி வைக்கலாம்.
கார்த்திகை 1: வாழ்வில் இயல்பான நிலை தொடரும். பணிச்சுமை அதிகரித்தாலும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும். சக ஊழியர்களிடம் நெருக்கம் தவிர்க்கவும்.


ரிஷபம்


latest tamil news


சூரியன், புதன், சந்திரனால் நற்பலன் உண்டு. துர்க்கை வழிபாடு நன்மை வளர்க்கும்.
கார்த்திகை 2,3,4: பெண்கள் வீண்வம்பில் சிக்க வாய்ப்புண்டு. செல்வச் சேர்க்கை ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கும் திட்டத்தைத் தள்ளிப் போடுங்கள்.
ரோகிணி: நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்தை விற்க வாய்ப்புண்டு. வாகனத்தை மாற்றும் சிந்தனை ஏற்படும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: தேவையான பணஉதவி கிடைக்கும். மனம் பரபரப்பாக இருக்கும் தேவையற்ற எண்ணங்களைத் தவிர்க்கவும். வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.


மிதுனம்


குரு, சுக்கிரன், ராகு, கேது அனுகூல அமர்வில் உள்ளனர். சிவன் வழிபாடு வளம் தரும்.
மிருகசீரிடம், 3,4: முயற்சிகள் அனைத்தும் சாதகமாக முடியும். வாழ்வில் வளர்ச்சி அமோக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
திருவாதிரை: வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். பணி தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். நன்மைகள் அதிகரிக்கும். வெளிநாட்டுக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
புனர்பூசம் 1,2,3: திருமணப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். கலைஞர்களுக்கு உயர்வு ஏற்படும். இளைஞர்கள் வாழ்வில் வசந்தம் வீசும். ஆரோக்யத்தில் கவனம் தேவை.


கடகம்


சுக்கிரன், புதன், ராகு கூடுதல் நற்பலன்களை தருவர். துர்கை வழிபாடு துன்பம் போக்கும்.
புனர்பூசம் 4: சிலர் புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவர். பணியாளர்கள் வீண்பேச்சை தவிர்க்கவும். வெளியூர் செல்லும் நிர்பந்தம் ஏற்படலாம்.
பூசம்: தேவையான உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும். குடும்பத்தில் குதுாகலம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். புதிய ஆடை வாங்குவீர்கள்.
ஆயில்யம்: குடும்பத்தில் திருமணம் நடக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஈடுபடுவீர்கள்.


சிம்மம்


latest tamil news


சூரியன், சுக்கிரன், புதன், சனி அனுகூல பலன் தருவர். பிள்ளையார் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
மகம்: சாதகமான வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துவீர்கள். திருமணப் பேச்சில் முன்னேற்றம் ஏற்படும். தர்ம சிந்தனையுடன் பிறருக்கு உதவுவீர்கள்.
பூரம்: தாமதமான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்தில் வருமானம் வரும்.
உத்திரம்1: பணியில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்யத்தில் அலட்சியம் கூடாது. திடீர் பயணம் செல்வீர்கள். நண்பர் வகையில் செலவு வரலாம். திருமண பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும்.


கன்னி


புதன், சுக்கிரன், கேது தாராள நற்பலன்களை வழங்குவர். முருகர் வழிபாடு வளம் தரும்.
உத்திரம் 2,3,4: சுயமாக தொழில் தொடங்கும் சிந்தனை உருவாகும். வெளிநாட்டு முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். பணிச்சுமை வெகுவாக குறையும்.
அஸ்தம்: உறவினர்களால் வாரத்தின் பிற்பகுதியில் பிரச்னை ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புண்டு. ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.
சித்திரை 1,2: எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும்.


துலாம்


குரு, புதன், சூரியன், சந்திரன் சுக்கிரனால் நன்மை கிடைக்கும். அனுமன் வழிபாடு வெற்றி அளிக்கும்.
சித்திரை 3,4: நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். நிர்வகிக்கும் திறன் கூடும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீண்பயம் மறையும்.
சுவாதி: கணவரின்/ மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். சிலர் புனித தலங்களுக்குச் செல்வர்.
விசாகம் 1,2,3: அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு வரலாம்.


விருச்சிகம்


புதன், சனி, சுக்கிரன், செவ்வாயால் அளப்பரிய நன்மை கிடைக்கும். சிவன் வழிபாடு சிரமம் குறைக்கும்.
விசாகம் 4: விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடும். அரசு வகையில் எதிர்பார்ப்பு அலைச்சலுக்குப் பின் முடியும்.
அனுஷம்: தந்தையின் உடல்நிலை சீராகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சிலர் அதிர்ஷ்ட வாய்ப்பால் வளர்ச்சியடைவர்.
கேட்டை: சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டி ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. பெண்களுக்கு பணிச்சுமை கூடும். கவனமுடன் செயல்பட்டால் பிரச்னை இருக்காது.
சந்திராஷ்டமம்: 3.9. 2021 காலை 6:00 மணி - 10:19 மணி


தனுசு


சுக்கிரன், புதன், செவ்வாய் அதிர்ஷ்டகர பலன்களை வழங்குவர். நரசிம்மர் வழிபாடு நலம் தரும்.
மூலம்: தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பெற்றோரின் உடல்நலனில் அக்கறை தேவை.
பூராடம்: ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மை ஏற்படும். சிலர் புனித யாத்திரை செல்வர்.
உத்திராடம்1: புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 3.9.2021 காலை 10:20 மணி - 5.9.2021 மாலை 6:47 மணி


மகரம்


புதன், சுக்கிரன், கேது நற்பலன் வழங்குவர். பெருமாள் வழிபாடு நன்மை அளிக்கும்.
உத்திராடம் 2,3,4: எதையும் சாதிக்க வேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் செல்வீர்கள்.
திருவோணம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மறைமுகப் பிரச்னையை சந்திக்கலாம். கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. திட்டமிட்ட பணியை செய்து முடிப்பீர்கள்.
அவிட்டம் 1, 2: அலுவலகத்தில் மதிப்பு கூடும். உறவினர் உங்களிடம் ஆலோசனை கேட்பர். சேமிப்பு உயரும். சுபச்செலவு அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: 5.9.2021 மாலை6:48 மணி- 7.9.2021 இரவு12:50 மணி


கும்பம்


சுக்கிரன், சுக்கிரன், குருபார்வையால் நற்பலன் உண்டு. சனீஸ்வரர் வழிபாடு சுபிட்சம் தரும்.
அவிட்டம் 3,4: உடல்நலனில் கவனம் செலுத்துவீர்கள். பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணம் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சதயம்: செல்வாக்கு கூடும். தெய்வபக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களிடம் விட்டுக்குக் கொடுத்துப் போவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: உறவினரால் உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படலாம். நண்பர்கள் விஷயத்தில் பொறுமை தேவை. ஆன்மிக எண்ணம் மேலோங்கும்.
சந்திராஷ்டமம்: 7.9.2021 இரவு12:51 மணி - 10.9.2021 அதிகாலை 4:50 மணி


மீனம்


ராகு, சனி, சந்திரன் தாராள நன்மைகளை வழங்குவர். விநாயகர் வழிபாடு துன்பம் தீர்க்கும்.
பூரட்டாதி, 4: முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
உத்திரட்டாதி: குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் நன்மை காண்பர். மற்றவரால் முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள்.
ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட மறைமுகப் போட்டி மறையும். உறவினர்களின் மத்தியில் நற்பெயர் காண்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவம் நிகழும். நண்பர் விஷயத்தில் கவனம் தேவை.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X