கடந்த 10 ஆண்டுகளாக சட்டசபையில், தி.மு.க., வெளிநடப்பு செய்யாத நாட்களே கிடையாது

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சட்டசபையின் கேள்வி நேரத்தில், கேள்விகளுக்கு ஜெயலலிதாவும், பழனிசாமியும் ஒரு நாளும் பதில் சொன்னதில்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளது வரவேற்க வேண்டிய நல்ல மரபு!- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்'கடந்த பத்தாண்டுகளாக, சட்டசபையில், தி.மு.க., வெளிநடப்பு செய்யாத நாட்களே கிடையாது. சபையில் இப்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அமைதியாக இருப்பது போல
கடந்த 10 ஆண்டுகளாக சட்டசபையில், தி.மு.க., வெளிநடப்பு செய்யாத நாட்களே கிடையாது

சட்டசபையின் கேள்வி நேரத்தில், கேள்விகளுக்கு ஜெயலலிதாவும், பழனிசாமியும் ஒரு நாளும் பதில் சொன்னதில்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளது வரவேற்க வேண்டிய நல்ல மரபு!
- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


'கடந்த பத்தாண்டுகளாக, சட்டசபையில், தி.மு.க., வெளிநடப்பு செய்யாத நாட்களே கிடையாது. சபையில் இப்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அமைதியாக இருப்பது போல இருந்தது இல்லையே...' என, நினைவூட்டும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.



தி.மு.க., ஆட்சிக்கும், அமைச்சர் பொன்முடிக்கும் சவால் விடுகிறேன்... எத்தனை நாட்களுக்கு நீங்கள் ஆட்சியில் இருப்பீர்கள்? மீண்டும் தேர்தல் வரும்; அதில் வெற்றி பெறுவோம். மீண்டும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை விழுப்புரத்தில் அமைப்போம்.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்


'இன்னும் ஐந்தாண்டுகளுக்கு இந்த சவால் உங்களுக்கு நினைவில் இருக்க வேண்டும்; கட்சி மாறாமலும் இருக்க வேண்டும்...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி.



குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு கட்டியதில் முறைகேடு என்று செய்தி வருகிறது. உடனே, சட்டசபையில் கருணாநிதியையும், துரைமுருகனையும் வானளாவப் புகழ்ந்து பேசுகிறார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்.
- அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிச்சாமி


'அதனால் தான் அவர், சட்டசபையில் பம்மினாரா; பாட்டு பாடினாரா என்ற சந்தேகத்தை மக்களுக்கு வரச் செய்து விட்டீர்களே...' என, கூறத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிச்சாமி பேட்டி.



சமையல் காஸ் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டில் ஆண்டில் மட்டும் 285 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு, 4,000 ரூபாய் சுமை. பெட்ரோலிய வரி உயர்வில் 3 லட்சம் கோடி ரூபாயை ஒவ்வோர் ஆண்டும் சுரண்டுகின்றனர்.
- தமிழக மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் கே.பாலகிருஷ்ணன்


latest tamil news




'சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப விலை மாறுபாடு ஏற்படுகிறது என தெரிந்தும், மத்திய அரசை சாடுவதா; இப்படித் தானே, 13 ஆண்டுகளாக நடக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை.



நாட்டிற்கே முன்னுதாரணமாக தமிழக அரசு விளங்கி வருகிறது. கவர்ச்சித் திட்டங்களுக்கு இடம் கொடுக்காமலும், தனிநபர்கள் துதிக்கு இடம் அளிக்காமலும் சிறப்பாக ஆட்சி செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்
- ஆந்திராவின் லோக்சத்தா கட்சித் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண்


'சட்டசபை நிகழ்ச்சிகளை வந்து பார்த்திருக்க மாட்டாரோ; தி.மு.க., ஆதரவு நாளேடுகளை மட்டுமே பார்த்திருப்பாரோ...' என்ற சந்தேகங்கள் எழும் வகையில், ஆந்திராவின் லோக்சத்தா கட்சித் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் அறிக்கை.



தன்னை புகழ்ந்து பேச வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியது, உதயநிதி ஸ்டாலினை, கட்சியினர் புகழ வேண்டும் என்பதற்காக தான். இதை உடனடியாக புரிந்து கொண்டனர் உடன் பிறப்புகள்!
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'தன்னை புகழ வேண்டாம் என ஸ்டாலின் சொன்னார் சரி. யாரும் கேட்கவில்லை. பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் சொல்கிறார்; பா.ஜ.,வினரும் கேட்பதில்லையே...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
03-செப்-202116:13:19 IST Report Abuse
பாமரன் என்னாது ஆட்டுக்குட்டியை பாஜகவினர் புகழுறாங்களா...??? அட இன்று ஒரு தகவல் நல்லாயிருக்கே...??? இதைத்தான் வெரி குட்டுன்னான் வெள்ளைக்காரன்... யப்பா பக்கோடாஸ் சேதி புரியுதா... தளத்தில் இன்னும் தீயா வேலை செய்யணுமாம்... அக்காங்...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-செப்-202116:10:08 IST Report Abuse
Pugazh V //சபையில் இப்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அமைதியாக இருப்பது போல// எப்படிப் பேசுவார்கள்? கடந்த பத்து ஆண்டுகளில் தவறான மோசமான நிர்வாக த்தால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படுத்தியதும், பத்து ஆண்டுகளில் கொடநாடு எஸ்டேட் மற்றும்.பரப்பனங்காடி க்கு அரசு கார்களில் பயணம், பிறகு, ஊழல் திலகம் ஜெயலலிதா நலம் பெற.தீச்சட்டி கரகம் மண்சோறு அலகு குத்தல் யாகம் பூஜை கோடி ரூபாய் க்கு இட்லி கெட்டி சட்னி, பிறகு கூவத்தூர் கும்மாளம் என்று பொழுதைப் போக்கிவிட்டு இப்போது எந்த முகத்தோடு என்ன கேள்வி கேட்பது? அமைதியாகத் தான் இருந்தாக வேண்டும். எதாவது பேசினால்...மக்கள், "பத்து வருஷம் நீங்க என்ன கிளிச்சீங்க" என்கிறார் களே
Rate this:
Cancel
RAVIKUMAR - chennai,இந்தியா
03-செப்-202114:32:43 IST Report Abuse
RAVIKUMAR சபையில் கிடைத்த நேரத்தில் முடிந்தவை திமுக எதிர்கட்சி வேலையே செய்தது ...ஒரு எதிர்கட்சியாக இல்லாமல் ஆளும் கட்சிக்கு இணையாக இருந்தது திமுக ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X