பாராலிம்பிக்; உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளி வென்றார்

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
டோக்கியோ: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.ஜப்பானின் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 16வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இன்று (செப்.,3) நடைபெற்ற ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் பங்கேற்றார். அதில் பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் பிரவீன்குமாருக்கு கடும் போட்டி
Paralympics, Praise4Para, Silver, Praveen Kumar, India, IND, High Jump, பாராலிம்பிக், பிரவீன்குமார், உயரம் தாண்டுதல், வெள்ளி, இந்தியா

டோக்கியோ: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

ஜப்பானின் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 16வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இன்று (செப்.,3) நடைபெற்ற ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் பங்கேற்றார். அதில் பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் பிரவீன்குமாருக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட பிரவீன்குமார் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.


latest tamil news


பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற 18 வயதே ஆன பிரவீன்குமார் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் ஆவார். இதன்மூலம் நடப்பு பாராலிம்பிக் தொடரில் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பிரவீன்குமாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்



latest tamil news


துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா 50 மீ., பிரிவில் வெண்கலம் வென்றார். அவர் ஏற்கனவே 10 மீ., பிரிவில் தங்கம் வென்றவர் ஆவார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
03-செப்-202113:12:31 IST Report Abuse
Vena Suna நம் முதல்வர் அவருக்கு கலைஞர் எழுதிய புத்தகங்கள் கொடுத்து கௌரவிப்பார்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
03-செப்-202112:20:59 IST Report Abuse
vpurushothaman வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பாராட்டுகள் - வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel
03-செப்-202110:14:03 IST Report Abuse
சந்திரசேகர் நம்மலால முடியாத காரியத்தை ஒருவர் செய்யும் போது வாழ்த்தனும்.அதுதான் மனித பண்பு.வாழ்த்துக்கள் நண்பரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X