பொது செய்தி

தமிழ்நாடு

136 நாட்களுக்கு பின் முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021
Share
Advertisement
கூடலூர்: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக, தமிழக அரசின் உத்தரவுப்படி, ஏப்., 20ல் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது.கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து தமிழக அரசு உத்தரவு காரணமாக, முதுமலை புலிகள் காப்பம் இன்று (செப்., 3), காலை திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கான வாகன சவாரி மூலம் வனப்பகுதிக்குள் அழைத்து செல்லப்பட்டனர். சுற்றுலா பயணிகளுக்கு,
முதுமலை, புலிகள் காப்பகம், திறப்பு, சுற்றுலா பயணிகள், மகிழ்ச்சி

கூடலூர்: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக, தமிழக அரசின் உத்தரவுப்படி, ஏப்., 20ல் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது.

கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து தமிழக அரசு உத்தரவு காரணமாக, முதுமலை புலிகள் காப்பம் இன்று (செப்., 3), காலை திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கான வாகன சவாரி மூலம் வனப்பகுதிக்குள் அழைத்து செல்லப்பட்டனர். சுற்றுலா பயணிகளுக்கு, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டதுடன், வாகனங்களில் 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.மேலும், வன ஊழியர்கள் மூலம், சோதனை முறையில் வளர்ப்பு யானைகளுக்கு, சவாரி பயிற்சி அளித்ததனர்.


latest tamil news



வனத்துறையினர் கூறுகையில், 'வரும், 6ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கான யானை சவாரி துவங்கப்படுவதுடன்; தங்கும் விடுதிகளும் திறக்கப்படுகிறது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோய் பாதித்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் வருகையை தவிர்க்க வேண்டும்' என, கூறினர்.136 நாட்களுக்கு பின் முதுமலை திறக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X