கோவிட்: நாடு முழுதும் 97.45% பேர் நலம்

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் மேலும் 34 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் விகிதம் 97.45 ஆக உள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 45,352 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 29 லட்சத்து 03 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 34,791 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கோவிட், கோவிட்வைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் மேலும் 34 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் விகிதம் 97.45 ஆக உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 45,352 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 29 லட்சத்து 03 ஆயிரமாக பதிவானது.

ஒரே நாளில் 34,791 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 63 ஆயிரத்தை தாண்டியது.

தற்போது 3.99 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 366 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,39,895 ஆனது.


latest tamil news


இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.45 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.21 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


கேரளாவில் அதிகம்


கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்ட 45 ஆயிரம் பேரில் கேரளாவில் மட்டும் 32,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நாடு முழுதும் பதிவான 366 உயிரிழப்புகளில் கேரளாவில் மட்டும் 188 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.


தடுப்பூசி

இந்தியாவில் இன்று (செப்டம்பர் 3) காலை 8 மணி நிலவரப்படி 67.09 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 74,84,333 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news





உலக பாதிப்பு


இன்று (செப்டம்பர் 3-ம் தேதி) காலை 10:20 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 21 கோடியே 99 லட்சத்து 75 ஆயிரத்து 001 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 லட்சத்து 57 ஆயிரத்து 307 பேர் பலியாகினர். 19 கோடியே 66 லட்சத்து 32 ஆயிரத்து 018 பேர் மீண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் Kerala is the only state which doesnt care to control the disease , its seems it doesnt want to control the spread maharashtra too
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X