பொது செய்தி

தமிழ்நாடு

இடஒதுக்கீடு தியாகிகள் பட்டியலில் விடுப்பட்ட 4 பேரை சேருங்கள்: வன்னியர் கூட்டமைப்பு கோரிக்கை

Added : செப் 03, 2021
Share
Advertisement
சென்னை: இடஒதுக்கீடு தியாகிகள் பட்டியலில் 25 பேர் உள்ளதால், விடுப்பட்ட 4 பேரை சேர்க்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினுக்கு, வன்னியர் கூட்டமைப்பு நிறுவனர் சி.என்.ராமமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: மாபெரும் சமூகமான வன்னிய மக்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான தியாகிகளுக்கு 4 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டப்படும். பலியான தியாகிகள்

சென்னை: இடஒதுக்கீடு தியாகிகள் பட்டியலில் 25 பேர் உள்ளதால், விடுப்பட்ட 4 பேரை சேர்க்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினுக்கு, வன்னியர் கூட்டமைப்பு நிறுவனர் சி.என்.ராமமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: மாபெரும் சமூகமான வன்னிய மக்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான தியாகிகளுக்கு 4 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டப்படும். பலியான தியாகிகள் குடும்பத்தில் ஒருவருக்கு, அவர்கள் கல்வித்தகுதிக்கு ஏற்பட அரசு வேலை வழங்கப்படும் என்ற அறிவிப்பை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை வரவேற்கிறோம். அவரை அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி சார்பில் மனதார பாராட்டுகிறோம்.
இதே தியாகிகள் 25 பேருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி, தலா ஒரு லட்சம் கருணை தொகையும், மாதந்தோறும் உதவித்தொகையும், சமூக நீதி போராளிகள் என்ற சான்றிழும் வழங்கினார். இப்போது சட்டசபையில் 21 பேர்களுக்கு என, முதல்வர் அறிவித்துள்ளார். எனவே, விடுப்பட்ட 4 பேர்களையும் சேர்த்து, 25 தியாகிகளுக்கும் சேர்த்து மணி மண்டபம் கட்ட வேண்டும்.இவ்வாறு சி.என்.ராமமூர்த்தி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X