இடா புயல்: பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நியூயார்க்: அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இடா புயல், தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 45 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய 5வது சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா கருதப்படுகிறது.இடா சூறாவளி பாதிப்பு காரணமாக கடலோர மாவட்டங்கள்,

நியூயார்க்: அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இடா புயல், தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 45 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.latest tamil newsஅமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய 5வது சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா கருதப்படுகிறது.இடா சூறாவளி பாதிப்பு காரணமாக கடலோர மாவட்டங்கள், ஜீன் லேபிட், லெயர் லேபிட் உள்ளிட்ட சிறிய நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் சுரங்கப் பாதைக்குள் கனமழை கொட்டும் காட்சியும், அதற்கு மத்தியிலும் இயக்கப்பட்ட கடைசி ரயில் போகும் காணொளியும் உள்ளூர் மக்களால் பகிரப்பட்டன.


latest tamil newsஇந்நிலையில், நியூயார்க் நகரின் ப்ரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்கப் பகுதிகளிலும் வெளியிடங்களிலும் மக்கள் சிக்கியிருக்கிறார்கள். அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அந்த நகர மேயர் பில் டி பிளாசியோ, 'வரலாறு காணாத வானிலையை நியூயார்க் அனுபவித்து வருகிறது. கொடூரமான வகையில் ஓடும் வெள்ளத்தால் நகர சாலைகள் படுபயங்கர நிலையில் உள்ளன. கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 45 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்' என்று தெரிவித்துள்ளார். நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
03-செப்-202111:38:08 IST Report Abuse
sankaseshan It is very unfortunate. Electing Biden as president has brought illluk to people of USA
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
03-செப்-202120:55:57 IST Report Abuse
DVRR100% right...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X