ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை| Dinamalar

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Added : செப் 03, 2021
Share
மேட்டுப்பாளையம் : தேசிய வேலை உறுதித் திட்டத்தில் பணிவழங்கப்படாததை கண்டித்து, காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.காரமடை ஊராட்சி ஒன்றியம், முடுதுறை ஊராட்சியில், பெரியகுமாரபாளையம், சின்ன குமாரபாளையம், எம்.ஜி.ஆர்., நகர் உட்பட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மக்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில்


மேட்டுப்பாளையம் : தேசிய வேலை உறுதித் திட்டத்தில் பணிவழங்கப்படாததை கண்டித்து, காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியம், முடுதுறை ஊராட்சியில், பெரியகுமாரபாளையம், சின்ன குமாரபாளையம், எம்.ஜி.ஆர்., நகர் உட்பட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மக்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றி வந்தனர்.கடந்த மூன்று மாதங்களாக, இவர்களுக்கு ஊராட்சி சார்பில் வேலை வழங்கப்படவில்லை. வேலையை நம்பி இருந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும், எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.இக்கிராம மக்கள், காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X