ஆப்கனில் முல்லா பரதர் தலைமையில் புதிய அரசு?

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
காபூல்: 'பெண் உரிமை விவகாரத்தில் சகிப்புத் தன்மையுடன் ஆட்சி செய்யப்படும்' என தலிபான்கள் உறுதி அளித்திருந்த நிலையில், ஆப்கனில் அவர்கள் இன்றே (செப். 3) ஆட்சி அமைப்பார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முல்லா பரதர் தலைமையில், ஆப்கனில் புதிய ஆட்சி அமையும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அரசில் தலிபான் அமைப்பை நிறுவிய முல்லா ஒமரின் மகன் முகமது யாக்கூப்

காபூல்: 'பெண் உரிமை விவகாரத்தில் சகிப்புத் தன்மையுடன் ஆட்சி செய்யப்படும்' என தலிபான்கள் உறுதி அளித்திருந்த நிலையில், ஆப்கனில் அவர்கள் இன்றே (செப். 3) ஆட்சி அமைப்பார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முல்லா பரதர் தலைமையில், ஆப்கனில் புதிய ஆட்சி அமையும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அரசில் தலிபான் அமைப்பை நிறுவிய முல்லா ஒமரின் மகன் முகமது யாக்கூப் மற்றும் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டன்க்ஜாய் ஆகியோர் முக்கிய பொறுப்பில் இருப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆட்சி அமைப்பதற்காக அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் காபூலில் குவிந்துள்ளனர்.



latest tamil news




கடந்த 20 ஆண்டுகாலப் போருக்கு பின், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின. ஆப்கனைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைப்பதில் மும்முரம் காட்டிவருகின்றனர். அங்கு எம்மாதிரியான ஆட்சி அமைக்கப்படும் என்பதை உலக நாடுகள் தீவிரமாக கவனித்துவரும் நிலையில், புதிய தலைவர்களுடன் உறவை மேம்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


latest tamil news




இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கு ஆப்கனில் உள்ள மசார்-இ-ஷெரீப், தெற்கில் இருக்கும் கந்தஹார் ஆகிய நகரங்களை இணைக்கும் விமான சேவைகளை தொடங்கி உள்ளதாக ஐ.நா., அறிவித்துள்ளது. அதேபோல், ஆப்கனில் தூதரகத்தை தொடர்ந்து இயக்க சீனா உறுதி அளித்திருப்பதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் இன்று டுவிட் செய்துள்ளார். ஆப்கனில் இருந்து வெளியேற விரும்பும் மக்களை மீட்கும் வகையில் பிரிட்டன், இத்தாலி நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆப்கனின் அண்டை நாடுகளுக்கு சென்று பேச்சு நடத்தவுள்ளனர்.



latest tamil news



இந்நிலையில், 'பெண் உரிமை விவகாரம் போன்றவற்றில் சகிப்புத்தன்மையுடன் எங்களது ஆட்சி செய்யப்படும்' என தலிபான்கள் உறுதி அளித்திருந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அவர்கள் இன்று (செப். 3) ஆட்சி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 'புதிய அரசு குறித்த அறிவிப்பு இன்று மதியம் தொழுகைக்கு பின் வெளியிடப்படும்' என, தலிபான் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனால் உலக நாடுகளின் கவனம் ஆப்கன் பக்கம் திரும்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
03-செப்-202120:33:21 IST Report Abuse
sankaranarayanan இந்தியாவிலே அயோத்தியில் இராம ராஜ்ஜியம் ஆரம்பிக்காப்போவது ஆப்கானிஸ்தானில் இராமரின் தம்பி பரதரின் ஆட்சி துவங்கப்போகிறது. என்ன ஒரு ஒற்றுமையப்பா
Rate this:
Cancel
Venkatesan - Chennai,இந்தியா
03-செப்-202120:10:09 IST Report Abuse
Venkatesan பெண்களுக்கு அதிகாரம் கொடுக்குறீங்களோ இல்ல அதிக காரம் கொடுக்குறீங்களோ ... கொடுப்போம்னு சொன்னதுக்கே இங்க இருக்குற கூலிபான்ஸ் டான்ஸ் தான்
Rate this:
Cancel
Balakrishnan S - Trichy,இந்தியா
03-செப்-202118:31:17 IST Report Abuse
Balakrishnan S பரதர் துப்பாக்கியெல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு எல்லோரையும் பிரதர்ஸ் சிஸ்டர்ஸா நினைச்சு செயல்பட்டா நல்லா இருக்கும்... அத விட்டுட்டு காஷ்மீர் பேரச் சொல்லி இந்தியாவைச் சீண்டினால் வாலை ஒட்ட நறுக்க வேண்டியதுதான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X