திருப்பதி : திருப்பதி அருகே செம்மரம் வெட்ட வந்த தமிழகத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள் உட்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர போலீசார் கூறியதாவது:
திருப்பதிக்கு வரும் வழியில் உள்ள ஆஞ்சாரம்மா கோண கோவில் அருகில் போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு 'ஈச்சர்' வாகனம் அந்த வழியில் வந்தது.அந்த வாகனம் நிறுத்தப்பட்டதும், பலர் அதிலிருந்து இறங்கி ஓடத்துவங்கினர். அதை கவனித்த போலீசார் அவர்களை விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.
வாகனத்திலிருந்த 21 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து இரும்பு கோடரிகள், மொபைல் போன்கள், 10 ஆயிரத்து 910 ரூபாய் ரொக்கம், காய்கறிகள், சமையலுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் இவர்கள் செம்மரம் வெட்டி கடத்தி வந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதிற்கு உட்பட்ட ஐந்து பேரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிய போலீசார் மீதமுள்ள 16 பேர் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE