பொது செய்தி

தமிழ்நாடு

'குறைகளை காது கொடுத்து கேட்காத எஸ்.பி.,': இடமாற்ற விவகாரத்தில் எஸ்.ஐ.,க்கள் வேதனை

Added : செப் 03, 2021
Share
Advertisement
ஈரோடு: பணியிட மாற்றத்துக்கு ஆறு முறை விண்ணப்பித்தும் பலனில்லாததால், எஸ்.ஐ.,க்கள் வேதனை அடைந்துள்ளனர். எஸ்.பி., மீது வருத்தம் தெரிவித்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கு முன், நிர்வாக காரணங்களுக்காக நேரடி மற்றும் பதவி உயர்வு பெற்ற எஸ்.ஐ.,க்கள், 46 பேர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், தேர்தலுக்கு பின் விரும்பும் இடத்துக்கு

ஈரோடு: பணியிட மாற்றத்துக்கு ஆறு முறை விண்ணப்பித்தும் பலனில்லாததால், எஸ்.ஐ.,க்கள் வேதனை அடைந்துள்ளனர். எஸ்.பி., மீது வருத்தம் தெரிவித்துள்ளனர்.


ஈரோடு மாவட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கு முன், நிர்வாக காரணங்களுக்காக நேரடி மற்றும் பதவி உயர்வு பெற்ற எஸ்.ஐ.,க்கள், 46 பேர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், தேர்தலுக்கு பின் விரும்பும் இடத்துக்கு மாற்றம் வாங்கி செல்லலாம் என காத்திருந்தனர். ஓட்டு எண்ணிக்கை முடிந்து மூன்று மாதங்கள் முடிந்தும் இடமாற்றம் கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு பின், இடமாற்றம் விருப்ப விண்ணப்பம் ஆறு முறை பெற்றும் பலனில்லை. ஈரோடு மாவட்ட எஸ்.ஐ.,க்கள் மட்டுமே இன்னமும் இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளனர். ஓய்வு நிலையில் உள்ளோருக்கும் மாற்றம் கிடைக்கவில்லை. எங்களின் குறைகளை காது கொடுத்து கேட்க எஸ்.பி., தயாராக இல்லை. வார விடுமுறையும் வழங்குவதில்லை. இனியேனும் காலம் தாழ்த்தாமல் இடமாற்றம் செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X