ஏரிகளில் மீன் பிடிக்கும் ஏலம் ஒத்திவைப்பு: அ.தி.மு.க.,-பா.ம.க.,வினர் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏரிகளில் மீன் பிடிக்கும் ஏலம் ஒத்திவைப்பு: அ.தி.மு.க.,-பா.ம.க.,வினர் போராட்டம்

Added : செப் 03, 2021
Share
அம்மாபேட்டை: ஏரிகளில் மீன் பிடிக்கும் ஏலத்தை ஒத்தி வைத்ததால், அ.தி.மு.க., மற்றும் பா.ம.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அம்மாபேட்டை யூனியனுக்குட்பட்ட, சீலம்பட்டி ஏரி உள்பட நான்கு ஏரிகளுக்கு, மீன் பிடிக்கும் உரிமத்துக்காக, யூனியன் அலுவலகத்தில் நேற்று ஏலம் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் லதா, சக்திவேல் தலைமை வகித்தனர். இதில், 133 பேர் பங்கேற்றனர். கிருஷ்ணசாமி என்பவர், 50 ஆயிரத்துக்கு

அம்மாபேட்டை: ஏரிகளில் மீன் பிடிக்கும் ஏலத்தை ஒத்தி வைத்ததால், அ.தி.மு.க., மற்றும் பா.ம.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அம்மாபேட்டை யூனியனுக்குட்பட்ட, சீலம்பட்டி ஏரி உள்பட நான்கு ஏரிகளுக்கு, மீன் பிடிக்கும் உரிமத்துக்காக, யூனியன் அலுவலகத்தில் நேற்று ஏலம் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் லதா, சக்திவேல் தலைமை வகித்தனர். இதில், 133 பேர் பங்கேற்றனர். கிருஷ்ணசாமி என்பவர், 50 ஆயிரத்துக்கு ஏலம் கூறினார். அப்போது கடந்த முறை நடந்த ஏலத்தில், மீன் குஞ்சு விடுவதில் பிரச்னை உள்ளது. இதை முதலில் தீர்க்க வேண்டும் என ஒருவர் கூறவே, கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஏலத்தை ஒத்தி வைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து ஏலத்தில் பங்கேற்க வந்த, 100க்கும் மேற்பட்டோர் கலைந்து சென்றனர். ஆனால் அ.தி.மு.க., மற்றும் பா.ம.க.,வை சேர்ந்தவர்கள் இதற்கு உடன்படாமல், ஆவணங்களை காட்டுமாறு வலியுறுத்தினர். மாலையில் யூனியன் அலுவலகத்தில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மேகநாதன் உட்பட, 15க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை போலீசார், பி.டி.ஓ.,க்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து நாளை (இன்று) தெரிவிக்கப்படும் எனக்கூறவே, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X