மாணவனை பாட்டிலால் தாக்கிய மூன்று பேர் கைது| Dinamalar

மாணவனை பாட்டிலால் தாக்கிய மூன்று பேர் கைது

Added : செப் 03, 2021
ஈரோடு: ஈரோடு வெண்டிபாளையத்தை சேர்ந்த மாணவன், கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து, வீட்டுக்கு செல்ல கொல்லம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம கும்பல், மொபைல்போனை கேட்டு தகராறு செய்தனர். தர மறுக்கவே அடித்து உதைத்தனர்.

ஈரோடு: ஈரோடு வெண்டிபாளையத்தை சேர்ந்த மாணவன், கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து, வீட்டுக்கு செல்ல கொல்லம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம கும்பல், மொபைல்போனை கேட்டு தகராறு செய்தனர். தர மறுக்கவே அடித்து உதைத்தனர். அப்போது ஒருவன் சோடா பாட்டிலால் தலையில் தாக்க முயன்றான். மாணவன் தடுத்தபோது, வலது மணிக்கட்டு பகுதியில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. கும்பல் டூவீலரில் தப்பி சென்றது. சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். மாணவனை தாக்கிய, ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த, 18 வயது கல்லூரி மாணவர் இருவர், கூலி வேலை செய்யும், 18 வயது வாலிபர் என மூவரை நேற்று கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய மேலும் மூவரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X