சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுமாறிய டூவீலரால் கல்லூரி மாணவர் பலி

Added : செப் 03, 2021
Share
Advertisement
பவானி: அம்மாபேட்டை அருகே டூவீலர் நிலை தடுமாறி கவிழ்ந்ததில், கல்லூரி மாணவர் பலியானார். அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர் சுந்தரம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் சேரன், 19; குமாரபாளையத்தில் தனியார் கல்லூரியில், பி.காம்., இரண்டாமாண்டு படித்தார். நேற்று மதியம், 3:00 மணியளவில், பவானி - மேட்டூர் சாலையில், கூலிக்காரன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் பல்சர் பைக்கில் வீட்டுக்கு

பவானி: அம்மாபேட்டை அருகே டூவீலர் நிலை தடுமாறி கவிழ்ந்ததில், கல்லூரி மாணவர் பலியானார். அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர் சுந்தரம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் சேரன், 19; குமாரபாளையத்தில் தனியார் கல்லூரியில், பி.காம்., இரண்டாமாண்டு படித்தார். நேற்று மதியம், 3:00 மணியளவில், பவானி - மேட்டூர் சாலையில், கூலிக்காரன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் பல்சர் பைக்கில் வீட்டுக்கு சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அப்பகுதி மக்கள் மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியில் இறந்தார். பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X