சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டெய்லர், ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் திருட்டால் பரபரப்பு

Added : செப் 03, 2021
Share
Advertisement
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், வெவ்வேறு பகுதிகளில் நடந்த இரு திருட்டால், பரபரப்பு ஏற்பட்டது.ஈரோட்டை அடுத்த, 46 புதூரை சேர்ந்தவர் சீராளன், 53, டெய்லர். நாடார் மேட்டில் டெய்லர் கடை வைத்துள்ளார். மனைவி வடிவுக்கரசி. இருவரும் நேற்று காலை கடை பணிக்கு சென்றனர். மகள்கள் இருவரும் வெளியே சென்று விட்டனர். மாலையில் தம்பதி வீடு திரும்பியபோது,

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், வெவ்வேறு பகுதிகளில் நடந்த இரு திருட்டால், பரபரப்பு ஏற்பட்டது.


ஈரோட்டை அடுத்த, 46 புதூரை சேர்ந்தவர் சீராளன், 53, டெய்லர். நாடார் மேட்டில் டெய்லர் கடை வைத்துள்ளார். மனைவி வடிவுக்கரசி. இருவரும் நேற்று காலை கடை பணிக்கு சென்றனர். மகள்கள் இருவரும் வெளியே சென்று விட்டனர். மாலையில் தம்பதி வீடு திரும்பியபோது, முன்புற கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய், வெள்ளி டம்ளர், வெள்ளி காசு, வெள்ளி விளக்குகள், ஒரு பவுன் சங்கிலி திருட்டு போனது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு மூன்று லட்ச ரூபாய் ஆகும்.

மற்றொரு சம்பவம்: மொடக்குறிச்சி, கேட்டுபுதூர் திருமலா கார்டனை சேர்ந்தவர் குமார் ராஜா, 60; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் மனைவி தேவி, 56; இருவரும் நேற்று முன்தினம் மதியம் உறவினர் இல்ல விசேஷத்துக்காக, பரமத்தி வேலூர் சென்று விட்டு இரவில் வீடு திரும்பினர். முன்புற கதவு திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த, 32 ஆயிரம் ரூபாய், மூன்று பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. இரு திருட்டுகள் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்பகுதி 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகள் அடிப்படையில், போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X