பொது செய்தி

இந்தியா

கோவிட் பாதித்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம்: செவிலியருக்கு பாராட்டு

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவர் நன்மணிக்கரா பஞ்சாயத்து பகுதியில் உள்ள குடும்பநல மையத்தில் செவிலியராக உள்ளார். சம்பவத்தன்று நர்ஸ் ஸ்ரீஜா விடுமுறையில் வீட்டில் இருந்தார். இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்த 3 வயது குழந்தையை அவர் வீட்டுக்கு தூக்கி வந்தார். அந்த குழந்தை இறந்து விட்டதாக அனைவரும்

திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவர் நன்மணிக்கரா பஞ்சாயத்து பகுதியில் உள்ள குடும்பநல மையத்தில் செவிலியராக உள்ளார். சம்பவத்தன்று நர்ஸ் ஸ்ரீஜா விடுமுறையில் வீட்டில் இருந்தார். இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்த 3 வயது குழந்தையை அவர் வீட்டுக்கு தூக்கி வந்தார். அந்த குழந்தை இறந்து விட்டதாக அனைவரும் கருதினர்.latest tamil newsகுழந்தையை கையில் வாங்கிய ஸ்ரீஜா, கோவிட் தொற்று பாதிப்பால் தொடர் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு, குழந்தை மயங்கிய நிலையில் இருப்பதை புரிந்து கொண்டார். செயற்கை சுவாசம் அளிக்காவிட்டால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் உடனடியாக குழந்தையின் வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து முதல் உதவி செய்தார். இப்படி பலமுறை செய்ததால், குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மெதுவாக கண்களை திறந்து பார்த்தது. அதன்பின், குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


latest tamil newsஇதுகுறித்து, டாக்டர்கள் கூறுகையில், 'சரியான நேரத்தில் செயற்கை சுவாசம் அளித்ததால் குழந்தையின் உயிரை காப்பாற்றப்பட்டு உள்ளது' என்றனர்.

செவிலியர் ஸ்ரீஜா கூறுகையில், 'குழந்தை மயங்கிய நிலையில் இருந்த போதே அதன் நிலையை புரிந்து கொண்டேன். கொஞ்சம் தாமதம் செய்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, எனக்கு கோவிட் தொற்று ஏற்பட்டாலும் பரவாயில்லை எனக் கருதி முதல் உதவி சிகிச்சையாக செயற்கை சுவாசம் அளித்தேன். அது மிகவும் பயனளித்தது. குழந்தையின் உயிர்தான் முக்கியம்' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAGADEESANRAJAMANI - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
05-செப்-202109:25:04 IST Report Abuse
JAGADEESANRAJAMANI மனித உருவில் இறைவன்.நன்றி ஸ்ரீஜா.
Rate this:
Cancel
Maheshkumar -  ( Posted via: Dinamalar Android App )
04-செப்-202108:51:41 IST Report Abuse
Maheshkumar kadavul yengainu kettavangala koopidunga..... intha manasu thaan sir kadavul .....ungalukku onnum aagaathu sister... kadavulukku corona varaathu.... 🙏🙏🙏🙏🙏
Rate this:
Cancel
Srini -  ( Posted via: Dinamalar Android App )
04-செப்-202105:07:30 IST Report Abuse
Srini Another nightingale hats off God Bless You and Your family with healthy and happy life
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X