செங்கோட்டை வரை சுரங்கப்பாதை; டில்லி சட்டசபையில் கண்டுபிடிப்பு

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: டில்லி சட்டசபையில் இருந்து செங்கோட்டையை இணைக்கும் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.டில்லி சட்டசபை வளாகத்தில் செங்கோட்டையை இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு டில்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் கூறியதாவது: சட்டசபையில்
Delhi, Tunnel, Red Fort, Found, Used By, British, Freedom Fighters, டில்லி, சட்டசபை, செங்கோட்டை, சுரங்கப்பாதை

புதுடில்லி: டில்லி சட்டசபையில் இருந்து செங்கோட்டையை இணைக்கும் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டில்லி சட்டசபை வளாகத்தில் செங்கோட்டையை இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு டில்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் கூறியதாவது: சட்டசபையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்கைப்பாதை செங்கோட்டையை இணைக்கிறது. சுதந்திர போராட்ட வீரர்களை அழைத்து செல்வதற்காக ஆங்கிலேயர்கள் இதனை பயன்படுத்தியுள்ளனர். நான் 1993-ம் ஆண்டு எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சட்டசபையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் சுரங்கப்பாதை உள்ளதாக சிலர் தெரிவித்தனர்.


latest tamil news


இதனால் அதன் வரலாற்றை கண்டுபிடிக்க முயற்சி செய்தும், தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை. சுரங்கப்பாதையில் இருக்கும் ஒரு முனையை கண்டுபிடித்துள்ளோம். ஆனால், அதற்கு மேல் தோண்டவில்லை. ஏனெனில், மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சுரங்கப்பாதையின் பாதை அழிக்கப்பட்டுள்ளது. கடந்த 1912-ம் ஆண்டு, கோல்கட்டாவிலிருந்து டில்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டபோது இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் சட்டசபை வளாகம்தான் அப்போது மத்திய சட்டசபையாக வளாகமாக பயன்படுத்தப்பட்டது.


latest tamil news


பின்னர், இது நீதிமன்றமாக பயன்படுத்தப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வர இப்பாதை பயன்படுத்தப்பட்டது. சட்டசபை வளாகத்தில் தூக்கு மேடை இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதனை இப்போது வரை திறக்கவில்லை. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அங்கு ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளோம். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதை நினைவு சின்னமாக மாற்ற திட்டமிட்டுவருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
09-செப்-202109:40:31 IST Report Abuse
M  Ramachandran அஹா விவசாயிகள் போராட்டம் டில்லி செங்கோட்டையை நோக்கி நடந்த போது தேறியாமல் போய்விட்டதெ விட்டதே. கஷ்டப்பட்டுக்கு காலிஸ்தான் கோடியை சேங்கொட்டை மேல் ஏறி யேற்றினார்களெ இது தெரிந்தால் சுலபமாக உள்நுழைந்து பிரதமர் ஜனாதிபதியை சிறைபிடித்திருப்பார்களெ? டில்லி சட்டசபையும் கேஜுரிவால் தலைமையில் நடக்கிறது.
Rate this:
Cancel
E. RAJAVELU - Chennai,இந்தியா
03-செப்-202118:40:45 IST Report Abuse
E. RAJAVELU உனக்கு தெரிந்தது அவ்வளவுதானா....
Rate this:
Cancel
jay - toronto,கனடா
03-செப்-202118:11:16 IST Report Abuse
jay இப்போ இந்த அந்நிய மதத்தவர்கள் இங்கே வந்து இந்தியாவை அளிக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X