காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுப்போம்: தலிபான்கள் பேட்டி

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
காபூல்: 'காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம்' என, தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், இன்று ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். இந்நிலையில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் அளித்த பேட்டியில்

காபூல்: 'காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம்' என, தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், இன்று ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். இந்நிலையில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது:



latest tamil news



நாங்கள் இஸ்லாமியர்களுக்காகக் குரல் கொடுப்போம். ஏனென்றால் இஸ்லாமியர்கள் எங்கள் சொந்தங்கள்; எங்கள் சொந்த மக்கள். காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. அதே நேரம் எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்துவது எங்கள் கொள்கை அல்ல. உங்கள் சட்டப்படி இஸ்லாமியர்களுக்குச் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news



ஆப்கனைத் தலிபான்கள் கைப்பற்றிய போது, ஷாஹீன் அளித்த பேட்டியில், 'காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரம். அது உள்நாட்டுப் பிரச்னை' எனத் தெரிவித்திருந்தார். அதற்கு முரணாக தற்போது பேசியுள்ளார். மேலும், பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் ஒருவர் பேசுகையில், 'இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் சுதந்திரம் பெற தலிபான்கள் உதவ வேண்டும்' எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
06-செப்-202103:27:27 IST Report Abuse
meenakshisundaram மாப்பிளே முதல்லே உன் தொப்பியையும் தாடி யையும் காப்பாத்திக்க பாரு .அப்புறம் இந்தியாவுடன் மோதலாம் .அவங்க பாகிஸ்தானின் பேட்டன் பீரங்கிகளுக்கே சமாதி வச்சவங்க
Rate this:
Cancel
Ramamurthy Ramani - Chennai,இந்தியா
04-செப்-202114:27:13 IST Report Abuse
Ramamurthy Ramani முதலில் பள்ளிக்கூடம் செல்லட்டும் படித்தபின் முகமது நபி கூறிய மனித நேயத்தை புரிந்து கொள்ளட்டும் பின் தங்கள் நாட்டு பெண்களுக்கு சுதந்திரம் என்ற ஒன்றை முழுமையாக கொடுக்கட்டும். அப்புறம் உலகத்தில் உள்ள மற்ற எல்லா மக்களுக்கும் உதவட்டும். இன்னும் கிணற்றுக்குள் இருந்து வெளியில் வரவில்லை. வெளியில் வராதீங்க. வந்தா தவளைன்னு நெனச்சு நசிக்கிடுவாங்க. கபர்தார்.
Rate this:
Cancel
04-செப்-202110:13:35 IST Report Abuse
அப்புசாமி தலிபான்களின் உதவி தேவைப்படுபவர்கள் உடனடியாக ஆப்கானிஸ்தான் போய்ச் சேரவும். சகல விதமான வசதிகளும் ஷரியா சட்டத்துடன் செய்து தரப்படும். நாலு துணைவியர் கேரண்டி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X