நியூசி.,யில் கத்தியால் தாக்குதல்: ஐஎஸ் ஆதரவாளர் சுட்டுக்கொலை

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (9) | |
Advertisement
ஆக்லாந்து: நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் கத்தியால் தாக்கியதில் 6 பேர் காயமடைந்தனர். அவனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.இது தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியதாவது: சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி கடந்த 2011ல் இலங்கையில் இருந்து வந்தவன். பிரிவினைவாத கொள்கை மற்றும் ஐஎஸ் அமைப்பு மீதான ஆதரவு
நியூசிலாந்து, ஐஎஸ், ஆதரவாளர், சுட்டுக்கொலை

ஆக்லாந்து: நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் கத்தியால் தாக்கியதில் 6 பேர் காயமடைந்தனர். அவனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இது தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியதாவது: சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி கடந்த 2011ல் இலங்கையில் இருந்து வந்தவன். பிரிவினைவாத கொள்கை மற்றும் ஐஎஸ் அமைப்பு மீதான ஆதரவு காரணமாக, கண்காணிப்பு பட்டியலில் அவன் இருந்துள்ளான். ஆக்லாந்து நகர்ப்புற பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்ற அவன், மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி உள்ளான். இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.


latest tamil newsவீட்டில் இருந்து அவனை கண்காணித்துபடியே பின் தொடர்ந்து வந்த போலீசார், கத்தியால் தாக்க துவங்கிய 60 நொடிகளில் சுட்டு கொன்றனர். அருவருக்கத்தக்க, வெறுக்கத்தக்க தவறான செயல் நடந்துள்ளது. கோர்ட் உத்தரவு காரணமாக கொல்லப்பட்ட பயங்கரவாதி பற்றிய தகவலை வெளியிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி, கடந்த 2016ல் பொது மக்களை தாக்க திட்டமிடப்பட்ட வழக்கில் கைதாகி சிறை சென்றவன் என்பது தெரியவந்துள்ளது. பொது மக்களை கொல்லும் நோக்கத்திலேயே தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-செப்-202110:04:16 IST Report Abuse
அப்புசாமி பொஸ்தகத்துல போட்டிருக்கற மாதிரிதான் செய்வாய்ங்க. எந்த நாட்டுக்குப் போனாலும் மூர்க்கம் ஒரே விதம்.
Rate this:
Cancel
04-செப்-202106:54:58 IST Report Abuse
ஆரூர் ரங் ஒரு TV சானல் செய்தி . இந்த தவ்ஹீத் பயங்கர வாதி இலங்கை( தமிழ் ) தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஆளாம் . இலங்கை சர்ச்சுகளில் குண்டுவெடிப்பு நடத்திய👹 அதே கும்பல்தான்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-செப்-202106:40:57 IST Report Abuse
Kasimani Baskaran அங்கும் நீதித்துறை ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளனான இந்த இலங்கை குடிமகனை சிறை வைக்க அனுமதியளிக்கவில்லை. ஆகவே காவல்த்துறை இவனை 24 மணி நேரமும் பின் தொடர்ந்துவந்து இருக்கிறது. 60 வினாடிகளுக்குள் கத்தியை வைத்து சிலரை ஆபத்தான அளவுக்கு தாக்கியிருக்கிறான் இந்தக்கயவன். நல்ல வேளை உடனே போட்டுத்தள்ளிவிட்டார்கள். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் குணமடைய பிரார்த்தனைகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X