வெண்கலம் வென்றார் ஹர்விந்தர்: பாராலிம்பிக் வில்வித்தையில் முதல் பதக்கம்

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021
Share
Advertisement
டோக்கியோ: பாராலிம்பிக் வில்வித்தையில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 'ரீகர்வ்' பிரிவில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலம் கைப்பற்றினார். ஜப்பானில் நடக்கும் டோக்கியோ பாராலிம்பிக் ஆண்களுக்கான வில்வித்தை தனிநபர் 'ரீகர்வ்' ஓபன் பிரிவு 'ரேங்கிங்' போட்டியில் 600 புள்ளிகளுடன் 21வது இடம் பிடித்த இந்தியாவின் ஹர்விந்தர் சிங், முதலிரண்டு சுற்றில்

டோக்கியோ: பாராலிம்பிக் வில்வித்தையில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 'ரீகர்வ்' பிரிவில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலம் கைப்பற்றினார்.



latest tamil news


ஜப்பானில் நடக்கும் டோக்கியோ பாராலிம்பிக் ஆண்களுக்கான வில்வித்தை தனிநபர் 'ரீகர்வ்' ஓபன் பிரிவு 'ரேங்கிங்' போட்டியில் 600 புள்ளிகளுடன் 21வது இடம் பிடித்த இந்தியாவின் ஹர்விந்தர் சிங், முதலிரண்டு சுற்றில் இத்தாலியின் ஸ்டெபானோ டிராவிசனி (6-5), ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் படோ (6-5) ஆகியோரை வீழ்த்தினார்.

பின், காலிறுதியில் 6-2 என ஜெர்மனியின் மாய்க் ஸ்ஜார்ஸ்செவ்ஸ்கியை வீழ்த்திய ஹர்விந்தர், அரையிறுதியில் 4-6 என, அமெரிக்காவின் கெவின் மதரிடம் வீழ்ந்தார். அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் எழுச்சி கண்ட ஹர்விந்தர் 6-5 என, தென் கொரியாவின் சு மின் கிம்மை தோற்கடித்தார். இதன்மூலம் பாராலிம்பிக் வில்வித்தை வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.


விவேக் ஏமாற்றம்

இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் விவேக் சிகாரா, 'ரேங்கிங்' போட்டியில் 609 புள்ளிகளுடன் 10வது இடம் பிடித்தார். முதல் சுற்றில் 6-2 என, இலங்கையின் சம்பத் பண்டார மேகஹாமுலேயா கடாராவை வீழ்த்திய விவேக், 2வது சுற்றில் 3-7 என, பிரிட்டனின் பிலிப்சிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.


latest tamil news



பாராலிம்பிக் போட்டியில் இது வரையில் இந்தியா இரண்டு தங்கம் 6 வெள்ளி மற்றும் 5வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் இன்று (3 ம் தேதி) ஒரே நாளில் மூன்று பதக்கங்ளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X