பொது செய்தி

இந்தியா

20 ஆயிரம் அரிச்சுவடி வேண்டும் தமிழ் சங்கத்தலைவர் வலியுறுத்தல்

Added : செப் 03, 2021
Share
Advertisement
தங்கவயல்:தங்கவயலில் தமிழைக் கற்றுக்கொடுக்க, 20 ஆயிரம் அரிச்சுவடி புத்தகங்கள் வழங்குமாறு தங்கவயல் தமிழ்ச்சங்கம், தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.தங்கவயல் தமிழ்ச் சங்கத்தலைவர் கலையரசன் கூறியுள்ளதாவது:தமிழக அரசு தமிழ் பரப்புரை கழகம் ஏற்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பிற மாநிலங்கள், பிற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழை பயிற்றுவிக்கவும், தமிழை

தங்கவயல்:தங்கவயலில் தமிழைக் கற்றுக்கொடுக்க, 20 ஆயிரம் அரிச்சுவடி புத்தகங்கள் வழங்குமாறு தங்கவயல் தமிழ்ச்சங்கம், தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

தங்கவயல் தமிழ்ச் சங்கத்தலைவர் கலையரசன் கூறியுள்ளதாவது:தமிழக அரசு தமிழ் பரப்புரை கழகம் ஏற்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பிற மாநிலங்கள், பிற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழை பயிற்றுவிக்கவும், தமிழை கற்றுக்கொடுக்கவும், ஊக்கமளிக்க முன் வந்திருப்பதை வரவேற்கிறோம்.தமிழின் பெரும் புலவர் முருகேச பாகவதர் நுால்களை, தமிழக அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இது வரவேற்கத்தக்கது.அதே போல், தங்கவயலில் பன்மொழி புலவர் பண்டிதமணி ஜி.அப்பாதுரையாரின் தமிழ் இலக்கிய நுால்கள் உட்பட, புத்தர் அறளறம் நுாலை எழுதினார். பண்டிதமணி அப்பாதுரையாரின் பிறந்த நாளை, அரசு விழாவாக கொண்டாட அரசு பரிசீலிக்க வேண்டும்.

தங்கவயலில் தமிழ் படிக்க 100க்கும் அதிகமான தமிழ் பள்ளிகள் இருந்தன.ஆனால் மெல்ல, மெல்ல தமிழ் பள்ளிகள் குறைந்து போயின. தமிழ் படிக்க பள்ளியே இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இளைய தலைமுறைக்கு தமிழை கற்க வழியில்லை. எனவே, தமிழை கற்றுத்தரும் முயற்சியில் தங்கவயல் தமிழ்ச்சங்கம் ஈடுபட்டுள்ளது.எனவே, தமிழக அரசு 20 ஆயிரம் அரிச்சுவடி நுால்களை வழங்கி உதவிட வேண்டுகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X