பொது செய்தி

இந்தியா

ரூ.1 லட்சம் நிவாரண நிதி கிடைக்காதவர்கள் கவலை

Added : செப் 03, 2021
Share
Advertisement
பெங்களூரு:கொரோனாவால் இறந்த ஏழை குடும்ப உறுப்பினருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அறிவித்து இரண்டு மாதங்களாகியும், இதுவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படாததால் பாதிக்கப்பட்டோர் பெரும் கவலை அடைந்துள்ளனர்.'கொரோனாவால் இறந்த பி.பி.எல்., குடும்ப உறுப்பினருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்' என்று எடியூரப்பா முதல்வராக இருந்த போது

பெங்களூரு:கொரோனாவால் இறந்த ஏழை குடும்ப உறுப்பினருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அறிவித்து இரண்டு மாதங்களாகியும், இதுவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படாததால் பாதிக்கப்பட்டோர் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

'கொரோனாவால் இறந்த பி.பி.எல்., குடும்ப உறுப்பினருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்' என்று எடியூரப்பா முதல்வராக இருந்த போது அறிவித்திருந்தார். அதிகாரபூர்வமான அரசாணையும் வெளியிடப்பட்டது.இரண்டு மாதமாகியும் இதுவரை அத்திட்டம் செயல்படுத்தவில்லை. கொரோனா நிவாரண நிதி பெறுவதற்கு சேவா சிந்து இணையதளத்தில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு லட்சம் ரூபாய் விண்ணப்பிப்பதற்கு வசதி செய்யப்படவில்லை.தாசில்தார்களை விசாரித்தால், 'இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அடுத்த வாரம் வாருங்கள்; பத்து நாட்கள் கழித்து வாருங்கள்' என கூறி அனுப்பி விடுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களும் அலுவலகங்களை சுற்றி சுற்றி சலித்து போயுள்ளனர்.

உழைக்கும் நபரை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் தங்கள் எதிர்கால வாழ்வை நினைத்து கவலையில் உள்ளனர்.அரசு வழங்கும் ஒரு லட்சம் ரூபாய் மூலம் ஏதாவது சுய தொழில் துவங்க நினைப்பவர்களும், உயர்கல்வி படிக்க நினைப்பவர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X