'சோலார்' மின்சாரம் தாக்கி 60 வயது ஆண் யானை பலி

Added : செப் 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மைசூரு:சோலார் மின்சாரம் தாக்கி 60 வயது ஆண் யானை இறந்தது, நாகரஹொளே தேசிய பூங்காவை ஒட்டியுள்ள கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மைசூரு மாவட்டம் ஹுன்சூர் தாலுகா நாகரஹொளே தேசிய பூங்காவை ஒட்டி, வீரனஹொசஹள்ளி கிராமம் அமைந்துள்ளது.கிராமத்துக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்கும் வகையில், சூரிய சக்தியால் இயங்கும், 'சோலார்' மின்வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன.அவ்வாறு
 'சோலார்' மின்சாரம் தாக்கி 60 வயது ஆண் யானை பலி

மைசூரு:சோலார் மின்சாரம் தாக்கி 60 வயது ஆண் யானை இறந்தது, நாகரஹொளே தேசிய பூங்காவை ஒட்டியுள்ள கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரு மாவட்டம் ஹுன்சூர் தாலுகா நாகரஹொளே தேசிய பூங்காவை ஒட்டி, வீரனஹொசஹள்ளி கிராமம் அமைந்துள்ளது.கிராமத்துக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்கும் வகையில், சூரிய சக்தியால் இயங்கும், 'சோலார்' மின்வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன.அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மின் வேலியை கடந்து, கிராமத்துக்குள் நுழைய முயன்ற யானை மின்சாரம் தாக்கி இறந்துள்ளது.

தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.இறந்தது ஆண் யானை என்றும், அதற்கு 60 வயது இருக்கலாம் என்றும் கூறினர். யானையின் இரண்டு தந்தங்கள் மீட்கப்பட்டன. பின் அதே இடத்தில் கால்நடை மருத்துவர் ரமேஷ், பிரேத பரிசோதனை நடத்திய பின், யானை அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
04-செப்-202113:23:15 IST Report Abuse
RajanRajan சோலார் மின்சாரம் உயிர் இழப்பை ஏற்படுத்தாத வகையில் எனர்ஜெய்சர் பொருத்த பட்டிருக்குமே. எப்படி இந்த யானை உயிரிழப்பானது என்பது விசாரிக்கப்பட வேண்டும். இது ஒரு சந்தேகமிக்க உயிரிழப்பாகும்.
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
04-செப்-202111:45:23 IST Report Abuse
தஞ்சை மன்னர் சமீப காலமாக இந்தியாவில் யானைகளின் அழிவு நம்மக்கு நல்ல அறிகுறிகளை தருவதாக இல்லை அரசு யோசித்து செயல்படவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X