மான் வேட்டை: நால்வர் மீது துப்பாக்கி சூடு

Added : செப் 03, 2021
Share
Advertisement
மாண்டியா:மானை வேட்டையாடி தோளில் சுமந்து சென்ற நால்வர் மீது, வன பாதுகாவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். ஒருவர் மீது குண்டு பாய்ந்தது; மூவர் தப்பியோடி விட்டனர்.மாண்டியா மலவள்ளியின் பசவனபெட்டா வனப்பகுதி அருகில், நான்கு நபர்கள், வனத்தில் மானை வேட்டையாடி, தோளில் சுமந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வன பாதுகாவலர்கள், இவர்களை கவனித்தனர்;

மாண்டியா:மானை வேட்டையாடி தோளில் சுமந்து சென்ற நால்வர் மீது, வன பாதுகாவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். ஒருவர் மீது குண்டு பாய்ந்தது; மூவர் தப்பியோடி விட்டனர்.

மாண்டியா மலவள்ளியின் பசவனபெட்டா வனப்பகுதி அருகில், நான்கு நபர்கள், வனத்தில் மானை வேட்டையாடி, தோளில் சுமந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வன பாதுகாவலர்கள், இவர்களை கவனித்தனர்; அவர்கள் தப்பியோட முயற்சித்தனர்.

வன பாதுகாவலர்கள் விரட்டி சென்று, துப்பாக்கி சூடு நடத்தியதில் வெங்கடேஷ் என்பவரின் மீது குண்டு பாய்ந்தது. மற்ற மூவர் தப்பி விட்டனர். காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஹலகூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X