பெங்களூரு ஞானபாரதி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை ஆபத்துடன் கடக்கும் மக்கள்

Added : செப் 03, 2021
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரின் ஞானபாரதி ரயில் நிலையத்தில், பெரும்பாலான பெண்கள், உயிரை கையில் பிடித்தபடி ரயில் தண்டவாளத்தை கடக்கின்றனர்.முந்தைய வாரம் ஞானபாரதி மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்துக்கு வரும் பயணியரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.இந்த ரயில் நிலையத்தில், மெமு ரயில்கள், மைசூரு -தாளகுப்பா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்கின்றன. இப்பகுதியில்
 பெங்களூரு ஞானபாரதி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை ஆபத்துடன் கடக்கும் மக்கள்

பெங்களூரு:பெங்களூரின் ஞானபாரதி ரயில் நிலையத்தில், பெரும்பாலான பெண்கள், உயிரை கையில் பிடித்தபடி ரயில் தண்டவாளத்தை கடக்கின்றனர்.

முந்தைய வாரம் ஞானபாரதி மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்துக்கு வரும் பயணியரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.இந்த ரயில் நிலையத்தில், மெமு ரயில்கள், மைசூரு -தாளகுப்பா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்கின்றன. இப்பகுதியில் பயணியரின் வசதிக்காக, ரயில்வே துறை நடை மேம்பாலம் கட்டி வருகிறது. ஆனால் பல ஆண்டாக பணிகள் மந்தமாக நடக்கிறது.

ரயில் நிலையத்தின் சுற்றுப்புறத்தில், ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் உள்ளது. மாண்டியா, மத்துார், சென்னப்பட்டணா, ராம்நகரிலிருந்து நுாற்றுக்கணக்கான பெண்கள், இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.அவர்கள் ஞானபாரதி ரயில் நிலையத்தில் வந்திறங்கி, அவசர, அவசரமாக தண்டவாளத்தை கடக்கின்றனர்.

இப்பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காது. வேகமாக வரும் ரயில்கள், தண்டவாளத்தை கடக்கும் பயணியரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.ஆனால், தினமும் பெண்கள், உயிரை கையில் பிடித்துக்கொண்டு, தண்டவாளத்தை கடக்கும் காட்சி தென்படுகிறது.

தண்டவாளத்தை கடந்து செல்லும் பெண் கூறுகையில், 'எங்களுக்கு வேறு வழியில்லை. உயிர் பயத்துடன் தண்டவாளத்தை கடந்து செல்கிறோம். ஐந்தாறு ஆண்டுகளாக இது போன்றுதான் நடந்து செல்கிறோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X