சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ஆயுள் முழுவதும் எதிர்க்கட்சி தான்!

Added : செப் 03, 2021
Share
Advertisement
ஆயுள் முழுவதும் எதிர்க்கட்சி தான்!'கால நேரம் கை கூடி வரும் நேரத்தில் இவர் குட்டையை குழப்புகிறாரே...' என, லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் பற்றி எரிச்சலுடன் பேசுகின்றனர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகிகள். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு போகும்போது, தன் இளைய மகன் தேஜஸ்வி யாதவுக்கு, கட்சியின் தலைமைப் பொறுப்பை கொடுத்து


அக்கம் பக்கம்

ஆயுள் முழுவதும் எதிர்க்கட்சி தான்!



'கால நேரம் கை கூடி வரும் நேரத்தில் இவர் குட்டையை குழப்புகிறாரே...' என, லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் பற்றி எரிச்சலுடன் பேசுகின்றனர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகிகள். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு போகும்போது, தன் இளைய மகன் தேஜஸ்வி யாதவுக்கு, கட்சியின் தலைமைப் பொறுப்பை கொடுத்து விட்டுச் சென்றார். மூத்த மகன் தேஜ் பிரதாபுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைந்தபோதும் தேஜஸ்வி யாதவுக்குத் தான் துணை முதல்வர் பதவி தரப்பட்டது. இதற்கு பின் பீஹார் அரசியலில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் உள்ளது. சிறையிலிருந்த லாலு பிரசாத் யாதவ் இப்போது வெளியில் வந்துள்ளதால் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். 'அடுத்தது நம் ஆட்சி தான்' என்கின்றனர்.
இவர்களது உற்சாகத்துக்கு அணை போட்டுள்ளார் தேஜ் பிரதாப். 'கட்சியில் எனக்கு முக்கியத்துவம் வேண்டும்' என, சமூக வலைதளங்களில தினமும் கலாட்டா செய்து வருகிறார். 'இந்த பையன் வீம்பு பிடிப்பதை பார்த்தால், ஆயுள் முழுதும் நாம் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர வேண்டும்' என, விரக்தியுடன் கூறுகின்றனர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X