சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 03, 2021
Share
Advertisement
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மகளிர் காங்கிரசில் மகளிருக்கு அதிக பொறுப்புகள் வழங்க வேண்டும். பெண்களின் ஓட்டு வங்கி 50 சதவீதம் உள்ளது. பெண்களின் அதிகாரத்தை பரவலாக்குவதன் வாயிலாக, காங்கிரஸ் வெற்றி பெற முடியும்.'டவுட்' தனபாலு: எல்லாம் சரி. கடந்த சட்டசபை தேர்தலில் தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிட பெண்களுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டதா...

'டவுட்' தனபாலு

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மகளிர் காங்கிரசில் மகளிருக்கு அதிக பொறுப்புகள் வழங்க வேண்டும். பெண்களின் ஓட்டு வங்கி 50 சதவீதம் உள்ளது. பெண்களின் அதிகாரத்தை பரவலாக்குவதன் வாயிலாக, காங்கிரஸ் வெற்றி பெற முடியும்.

'டவுட்' தனபாலு: எல்லாம் சரி. கடந்த சட்டசபை தேர்தலில் தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிட பெண்களுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டதா... தி.மு.க.,விடமிருந்து கிடைத்த 25 இடங்களில், ஒரேயொரு பெண் வேட்பாளர் தானே போட்டியிட்டார். விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட விஜயதாரணி வெற்றி பெற்றுள்ளார். இன்னும் அதிக இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால், 25 இடங்களிலும் வெற்றி பெற்றிருப்பரோ என்ற, 'டவுட்' வருகிறது!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான விதிகளில், கோர்ட் உத்தரவுப்படி சில திருத்தங்களை அரசு செய்துள்ளது. இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதுபோல, போட்டி தேர்வுகளையும் தமிழில் எழுதுவோருக்கு மட்டும் தான், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: தமிழகத்தில் உள்ள தமிழக அரசு பணிகளுக்கு தமிழ் படித்தவர்களைத் தான் நியமிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனினும், தமிழின் அருமை, பெருமையை உணராமல், வெறுமனே வேலைக்கு தமிழ் படித்தவர்கள், அரசு வேலைக்கு முயற்சிக்கக் கூடுமோ என்ற, 'டவுட்' வருகிறது. எனவே, தமிழை எந்த அளவுக்கு ஆழ்ந்து படித்துள்ளனர் என்பதை பார்த்து வேலை கொடுப்பது அவசியம்!


ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்:
விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்கும் நோக்கில், தமிழக அரசு செயல்படுகிறது. இதை, ஹிந்துக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, வரும் 10ல் திட்டமிட்டபடி, 1.25 லட்சத்துக்கு அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளோம்.

'டவுட்' தனபாலு: இதுபோன்ற போராட்டத்தை கடந்த முறை, அ.தி.மு.க., ஆட்சியிலிருந்த போது ஏன் அறிவிக்கவில்லை? அப்போது கொரோனா பயம் இருந்தது; இப்போது இல்லையோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வந்திருக்கும். எனவே, கொரோனா நேரத்தில் கூட்டம் சேராமல், சதுர்த்தி விழாவை கொண்டாட, உங்களைப் போன்ற அமைப்புகள் அறிவுறுத்தலாமே!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X